பாட்டாளிக் கட்சி உறுப்பினர் ரயீசா கானை போலிஸ் விசாரிக்கும்

பாலி­யல் தாக்­கு­தல் சம்­ப­வம் ஒன்றை போலிஸ் தவ­றா­கக் கையாண்­ட­தாக பாட்­டா­ளிக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரயீசா கான் கூறி­ய­தன் தொடர்­பில் அவர் மேல் விவ­ரங்­க­ளைத் தெரி­விக்­க­வேண்­டும் என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா சண்­மு­கம் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் கோரிக்கை விடுத்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி மாதர்­க­ளுக்கு அதி­கா­ரம் வழங்­கு­வது தொடர்­பில் விவா­தம் நடந்­தது. அதில் திரு­வாட்டி கான் கலந்­து­கொண்­டார்.

பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளான 25 வயது பெண்­ணு­டன் மூன்­றாண்­டு­க­ளுக்கு முன் போலிஸ் நிலை­யத்­தில் புகார் கொடுப்­ப­தற்­காக தானும் சென்­ற­தாக திரு­வாட்டி கான் குறிப்­பிட்டு இருந்­தார்.

பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளான பெண்ணை விசா­ரித்த போலிஸ் அதி­காரி, அந்­தப் பெண் அணிந்­தி­ருந்த உடை பற்றி பொருத்­த­மில்­லாத வார்த்­தை­களை உப­யோ­கித்ததாக­வும் அந்­தப் பெண் குடித்து இருந்­ததாக அவர் கூறி­ய­தா­க­வும் திரு­வாட்டி கான் தெரி­வித்து இருந்­தார்.

அதை­ய­டுத்து போலி­சார் தங்­களு­டைய புகார் பதி­வு­க­ளைப் பரி­சோ­தித்துப் பார்த்­த­தா­க­வும் திரு­வாட்டி கான் தெரி­வித்­த­தைப் போன்று ஒரு புகாரை அதி­கா­ரி­கள் பார்க்கவில்லை என்­றும் அமைச்­சர் சண்­மு­கம் தெரி­வித்­தார்.

அந்­தச் சம்­ப­வம் பற்றி பல்­வேறு விவ­ரங்­க­ளை­யும் தெரி­விக்­கும்­படி திரு­வாட்டி கானை அமைச்­சர் கேட்டுக்­கொண்­டார்.

போலிஸ் தொடர்­பில் தெரி­விக்­கப்­படும் இத்­த­கைய புகார்­களை அர­சாங்­கம் மிகக் கடு­மை­யாக கரு­து­கிறது என்­றும் நிகழ்ந்­த­தா­கக் கூறப்­படும் அந்­தச் சம்­ப­வத்­தில் சம்­பந்­தப்­பட்டு இருக்­கும் அதி­காரி­களை அடை­யா­ளம் காண்­ப­தும் அவர்கள் தரப்­பின் கருத்­து­க­ளைக் கேட்டு உண்மை நில­வ­ரங்­க­ளின் பேரில் மேல் நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­து முக்­கி­ய­மா­னது என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், பாதிக்­கப்­பட்­ட­வர் யார் என்­பதைத் தெரி­யப்­ப­டுத்­தக்­கூ­டிய எந்த விவ­ரத்­தையோ அல்­லது பெய­ரையோ தெரி­விக்­கும்­படி திரு­வாட்டி கான் கேட்­டுக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டார் என்று நாடா­ளு­மன்ற நாய­கர் டான் சுவான்-ஜின் உறுதி அளித்­தார்.

இதற்குப் பதி­ல­ளித்த திரு­வாட்டி கான், தான் கூறி­யது உண்மை என்றார். இருந்­தா­லும் மேல் விவ­ரம் எதை­யும் தெரி­விக்க திரும்­பத் திரும்ப அவர் மறுத்­து­விட்­டார்.

இந்த விவ­கா­ரத்தை இப்­போ­தைக்கு தான் விட்­டு­வி­டப்­போ­வதாக தெரி­வித்த அமைச்­சர், இதுபற்றி போலிஸ் தொடர்ந்து புலன்­வி­சா­ரணை நடத்­தும் என்­றும் கூறி­னார்.

"போலி­சில் இதற்கு பொறுப்பு வகிக்­கும் அதி­கா­ரி­கள் திரு­வாட்டி கானை நேர்காணல் செய்வார்கள்.

"குறிப்­பிட்ட அதி­கா­ரி­கள் தவறாக நடந்­து­கொண்­டி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­படும் எந்தப் புகா­ரும் மேல் விசா­ரணைக்­காக சிங்­கப்­பூர் போலிஸ் படை­யின் உள்­வி­வ­கார அலு­வ­ல­கத்­தி­டம் தெரி­யப்­ப­டுத்­தப்­படும்," என்­றும் அமைச்­சர் கா சண்முகம் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!