‘பண்டோரா பேப்பர்ஸ்’ விவகாரத்தில் சிங்கப்பூர் நிறுவனம்

பகி­ரங்­க­மாக்­கப்­பட்ட ரக­சி­ய­ நிதி ஆவணங்கள் 'பண்­டோரா பேப்­பர்ஸ்' விவ­கா­ரத்­தில் சிங்கப்பூரில் இயங்­கும் ஒரு நிறு­வனம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 'ஏஷி­யசிட்டி ட்ரஸ்ட்' எனும் அந்நிறு­வ­னம், லத்­தீன் அமெ­ரிக்கா, அமெ­ரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய பகு­தி­களில் இருக்­கும் நூற்­றுக்­க­ணக்­கான வாடிக்­கை­யா­ளர்­களுக்கு ரக­சி­யம் காக்­கும் நாடு­களில் போலி நிறு­வ­னங்­களை ஏற்­ப­டுத்தி அறக்­கட்­ட­ளை­களை நிர்­வ­கித்து வரு­வ­தாக 'பண்­டோரா பேப்­பர்ஸ்' ஆவ­ணங்­களில் தெரி­வித்துள்ளது. இதன் தொடர்­பி­லான தக­வல்­களை ஆராய்ந்து வரு­வ­தா­க­வும் தேவைப்­பட்­டால் மேலும் சில கண்காணிப்பு நட­வ­டிக்­கை­களை எடுக்கப்­போ­வ­தா­க­வும் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் தெரி­வித்­தது.

'ஏஷி­ய­சிட்டி ட்ரஸ்ட்' நிறு­வ­னத்­தைத் தொடர்ந்து கூர்ந்து கவ­னித்து வரு­வ­தா­க­வும் ஆணை­யம் குறிப்­பிட்­டது. தவ­றான நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சிங்­கப்­பூரின் நிதிக் கட்­ட­மைப்பு பயன்­படுத்­தப்­ப­டு­வது சகித்துக்­கொள்­ளப்­ப­டாது என்­றும் இதன் தொடர்­பி­லான விதி­மு­றை­களை மீறும் நிதி நிலை­யங்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கத் தான் தயங்காது என்­றும் ஆணை­யம் கூறி­யது.

கள்­ளப் பணத்தை நல்­லப் பண­மாக்­கு­வது, பயங்­க­ர­வா­தச் செயல்­க­ளுக்கு நிதி வழங்­கு­வது போன்­ற­வற்­றைத் தவிர்க்க போது­மான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுக்­கா­த­தால் சென்ற ஆண்டு 'ஏஷி­யா­சிட்டி ட்ரஸ்ட்' நிறு­வ­னத்­திற்கு நாணய ஆணை­யம் 1.1 மில்­லி­யன் வெள்ளி அப­ரா­தம் விதித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!