முஸ்லிம் பெண்களின் தலையங்கி தொடர்பில் வழிகாட்டிக் குறிப்பு

தலையங்கி என்­பது முஸ்­லிம் பெண்

­க­ளின் சம­யக் கட­மை­யாக இருந்த போதி­லும் தேவை ஏற்­ப­டும்­போது அவர்­கள் தங்­க­ளது உடை­களில் மாற்­றம் செய்­து­கொள்­ள­லாம் என முயிஸ் எனப்­படும் சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் அதன் அதி­கா­ரத்­துவ வழி­காட்­டிக் குறிப்­பில் தெரி­வித்துள்­ளது. இந்த வழி­காட்­டிக் குறிப்பு நேற்று வெளி­யி­டப்­பட்­டது. குறிப்­பிட்ட சில வேலை­யி­டங்­

க­ளின் தேவை­க­ளுக்கு இணங்க முஸ்­லிம் பெண்­கள் இத்­த­கைய அணு­கு­

மு­றை­யைப் பின்­பற்­ற­லாம் என்­றும் முயிஸ் கூறி­யுள்­ளது.

மூத்த இஸ்­லா­மி­யப் பேரா­ளர்­களை உள்­ள­டக்­கிய ஃபத்வா குழு இங்கு பின்­பற்­றப்­படும் சமய நெறி­மு­றை­கள் பற்றி தீர்­மா­னிக்­கிறது. அக்­குழு வெளி­யிட்டுள்ள வழி­காட்­டிக் குறிப்பு முஸ்­லிம் தாதி­யர் அணி­யக்­கூ­டிய தலையங்­கி­யின் நீளம் அல்­லது வடி­வ­மைப்பு குறித்து எத­னை­யும் தெரி­விக்­க­வில்லை.

இருப்­பி­னும் மணிக்­கட்­டுக்­குக் கீழ் எத­னை­யும் அணி­ய­வேண்­டாம் என்­னும் மருத்­து­வ­ம­னை­க­ளின் கொள்­கைக்கு இணங்க தாதி­யர் நடந்­து­கொள்­ள­லாம் என்று முயி­ஸின் சமய வழி­காட்­டிக் குறிப்பு தெரி­வித்­துள்­ளது.

நோயா­ளி­க­ளைப் பரா­ம­ரிக்­கும்­போது மருத்­து­வர்­களும் தாதி­ய­ரும் குட்­டைக் கை சட்டை அணி­வ­தன் மூலம் முன்கை பகுதி வெற்­றுப் பகு­தி­யாக, அதா­வது ஏதும் அணி­யாத பகு­தி­யாக இருக்­கும்.

நோய்த்தொற்­றின் அபா­யத்­தைக் குறைக்­க­வும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் பணி­யா­ளர்­கள் மற்­றும் நோயா­ளி­க­ளின் பாது­காப்­புக் கரு­தி­யும் இந்த நடை­முறை பின்­பற்­றப்­ப­டு­கிறது.

வரும் திங்­கட்­கி­ழமை (நவம்­பர் 1) முதல் முஸ்­லிம் தாதி­யர் தலையங்கி அணிய அனு­மதி வழங்­கப்­ப­டு­வ­தை­யொட்டி வழி­காட்­டிக் குறிப்பு வெளி­யி­டப்­பட்டுள்­ளது.

இதற்­கான கொள்கை மாற்­றத்தை பிர­த­மர் லீ சியன் லூங் ஆகஸ்ட் 29ஆம் தேதி தமது தேசிய தினப் பேரணி உரை­யில் அறி­வித்­தார். பல ஆண்டு காலம் இங்கு உள்ள சமூ­கங்­க­ளி­டையே திரட்­டப்­பட்ட கருத்­தொற்­றுமை மற்­றும் கலந்­தா­லோ­ச­னை­க­ளுக்­குப் பின்­னர் இது தொடர்­பான முடிவு எட்­டப்­பட்­டது.

கொள்கை மாற்­றம் சிங்­கப்­பூ­ரின் 7,000க்கும் மேற்­பட்ட சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் பணி­யா­ளர்­க­ளுக்­குப் பொருந்தும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!