கொடியையும் மென்பானத்தையும் திருடினார்; பாட்டியை எட்டி உதைத்து அறைந்தார்

சவூதி அரே­பிய கொடி­யைத் திரு­டி­யது உள்­ளிட்ட பல்­வேறு குற்­றங்­க­ளுக்­காக 33 வயது ஆட­வர் ஒரு­வ­ருக்கு நேற்று நீதி­மன்­றத்­தில் 11 மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

முகம்­மது ஹலி­முன் முகம்­மது ஷைஃபுல் எனப்­படும் அவர் தம் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்­ட­தைத் தொடர்ந்து தண்­டனை அறி­விக்­கப்­பட்­டது.

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி பின்­னி­ரவு 12.30 மணி­ய­ள­வில் பினாங்கு ரோட்­டில் உள்ள சவூதி அரே­பி­யத் தூத­ரத்­தி­லி­ருந்த கொடியை அதன் கம்­பத்­தி­லி­ருந்து ஹலி­முன் அகற்­றி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­ப­வம் நிகழ்ந்த இரண்டு நாட்­க­ளுக்­குப் பின்­னர் அந்­தத் தூத­ர­கம் போலி­சில் புகார் செய்­தது. அத­னைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5ஆம் தேதி அதி­காலை 2 மணி­ய­ள­வில் கன்­னாட் டிரை­வில் அந்த ஆட­வர் கைது செய்­யப்­பட்­டார்.

அவர் திரு­டிய கொடி அவ­ரது பையில் இருந்­தது. கொடி­யைத் திரு­டு­வ­தற்கு முன்­னர் பீஸ் செண்­ட­ரில் உள்ள ஃபேர்பி­ரைஸ் எக்ஸ்­பி­ரஸ் அங்­கா­டி­யில் $2.50 மதிப்­புள்ள மென்­பா­னப் போத்­தலை பணம் செலுத்­தா­மல் எடுத்­துச் சென்­றார் அவர். இரு மாதங்­க­ளுக்கு முன்­னர் தமது 81 வயது பாட்­டியை உதைத்து அவரது முகத்­தில் அறைந்­த­தா­க­வும் ஹலி­முன் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!