நிறுவனங்கள் எதிர்பார்ப்பு: கட்டுப்பாடுகளால் கட்டுமான திட்டங்கள் மேலும் தாமதமாகலாம்

கட்­டு­மா­னம், கப்­பல் பட்­டறை, பத­னீட்­டுத் தொழில்­து­றை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள் தங்­க­ளுடைய திட்­டங்­கள் ஒரு சில மாதங்­கள் தாம­த­ம­டை­ய­லாம் என்று எதிர்­பார்க்­கின்­றன.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோருக்­கான பய­ணத் திட்­டம் வழி எஸ் பாஸ், வேலை அனு­ம­திச்­சீட்டு ஊழி­யர்­கள் வேலை பார்க்க சிங்­கப்­பூர் வரு­வ­தற்கு வகை செய்­யும் புதிய விண்­ணப்­பங்­களை இந்­தத் துறை­களைச் சேர்ந்த முத­லா­ளி­கள் தாக்கல் செய்ய முடி­யாது என்ற புதிய கட்­டுப்­பாடு நடப்­புக்கு வந்­தி­ருப்­பதே இதற்­கான கார­ணம்.

மனி­த­வள அமைச்சு டிசம்­பர் 4ஆம் தேதி இந்­தப் புதிய கட்­டுப்­பாடு பற்றி அறி­வித்­தது.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­விடுதி­க­ளைச் சேர்ந்த வேலை அனு­ம­தி­தா­ரர்­க­ளுக்­கும் இந்­தக் கட்­டுப்­பா­டு­கள் பொருந்­தும்.

தாங்­கள் ஊழி­யர் பற்­றாக்­குறையை எதிர்­நோக்­கு­வ­தால் இப்­போ­தைய அல்­லது இடம்­பெ­ற­விருக்­கின்ற கட்­டு­மா­னத் திட்­டங்­களுக்­கான கால அளவை நிர்­ண­யிப்­பது சிர­ம­மாக இருக்­கிறது என்று நிறு­வனங்­கள் தன்­னி­டம் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

புதிய கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக தனது நிறு­வ­னத்­தின் புதிய திட்­டங்­களில் 90 விழுக்­காடு இரண்டு முதல் மூன்று மாத காலம் தாம­த­ம­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக ‘ஹிட்­டோமோ கன்ஸ்ட்­ரக்­‌ஷன்’ என்ற நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வா­கி­யான திரு­வாட்டி செரின் பான் கூறி­னார்.

கிட்­டத்­தட்ட ஓராண்டு கால­மாக தன்­னு­டைய நிறு­வ­னம் ஊழி­யர் பற்­றாக்­கு­றையை எதிர்­நோக்­கு­கிறது என்று ‘ஸ்டார்­சிட்டி கன்ஸ்ட்­ரக்­‌ஷன்’ என்ற நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர் ஸு சாங்­செங் தெரி­வித்­தார்.

தன் நிறு­வ­னத்­தின் மூன்று கட்டு­மா­னத் திட்­டங்­கள் மூன்று மாதங்­கள் முதல் ஓராண்டு வரை தாம­த­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­படு­வ­தாக இவர் கூறி­னார்.

சிங்­கப்­பூர் கட்­டு­மான ஒப்­பந்­தக்­கா­ரர்­கள் லிமிடெட் (Scal) அமைப்­பின் நிர்­வாக இயக்­கு­ந­ரான திரு­வாட்டி லூயிஸ் சுவா, ஆகப் புதிய மாற்றங்­களைக் கருத்­தில்­கொண்டு அதி­கா­ரி­கள் ஊழி­யர்­க­ளின் எண் ணிக்கை வரம்பு அளவை உயர்த்து­வார்­கள் என்று நம்­பிக்கை தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் தொழில்­துறைக் கூட்­ட­மைப்­பின் தலைமை நிர்­வா­கி­ லாம் யி யுங், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பயண ஏற்பாடு விரை­வில் வெளி­நாட்டு ஊழி­யர்­களை அனு­ம­திக்­கும் என்று நிறு­வ­னங்­கள் நம்­பு­வ­தா­கக் கூறி­னார்.

இத­னி­டையே, ‘பீப்­பிள் வேர்ல்ட் வைட் கன்­சல்­டிங்’ என்ற ஊழி­யர்­வள நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்கு ­ந­ரான டாக்­டர் டேவிட் லியோங், ஓமிக்­ரான் கிருமி தலை­தூக்கி இருப்­ப­தால் தொற்­றைத் தவிர்த்­துக்­கொள்ள கடு­மை­யான விதி­முறை­கள் தேவை என்று கருத்து தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!