துவாஸ் துறைமுக முதல் கட்ட கட்டுமானப் பணி நிறைவடைந்தது

ஆண்டு இறு­திக்­குள் துவாஸ் துறை­மு­கத்­தின் இரு கப்­பல் நிறுத்­து­மி­டங்­கள், பயன்­பாட்­டுக்­காக திறந்­து­வி­டப்­படும் என்று சிங்­கப்­பூர் கடல்­துறை, துறை­முக ஆணை­யம் (எம்­பிஏ) நேற்று தெரி­வித்­தது. 21 நிறுத்­து­மி­டங்­க­ளைக் கொண்ட துறை­மு­கத்­தில் முதல் கட்ட கட்­டு­மா­னப் பணி­கள் முடி­வ­டைந்­துள்ள நிலை­யில் இவ்­வாறு அறி­விக்­கப்­பட்டுள்­ளது.

குறிப்­பி­டத்­தக்க மைல்­கல்லை எட்­டி­யுள்ள இத்­திட்­டத்­தில் இது­வரை கிட்­டத்­தட்ட 34 மில்­லி­யன் மணி நேரம் செல­வி­டப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­பட்­டது. ஒட்­டு­மொத்த துவாஸ் துறை­மு­கத் திட்­டத்­தில் கால் பங்கு வேலை முடிந்­துள்­ள­தா­க­வும் கூறப்­பட்­டது.

துவாஸ் துறை­மு­கத் திட்­டத்­தின் மதிப்பு ஏறத்­தாழ $20 பில்­லி­ய­னுக்கு மேல் என்ற நிலை­யில், 2040ஆம் ஆண்டு வாக்­கில் முடி­வ­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அதற்­கான வேலை­களும் திட்­ட­மிட்­ட­படி நடந்­து­வ­ரு­வ­தாக அறி­யப்­ப­டு­கிறது.

விநி­யோ­கத் தொட­ரில் ஏற்­பட்ட நெருக்­கடி நிலை­யைச் சமா­ளிப்­ப­தற்­காக கடந்த சில மாதங்­களில் சிங்­கப்­பூர் அதன் இருப்பு கிடங்­கு­களை முன்­ன­தா­கவே திறக்க வேண்­டிய நிலைக்­குத் தள்­ளப்­பட்­டது.

இந்­நி­லை­யில் சிங்­கப்­பூ­ரின் ஐந்­தா­வது கொள்­கல துறை­மு­கத்­தைத் திறந்­து­வி­டு­வது, முக்­கி­ய­மான ஒரு கால­கட்­டத்­தில் நிகழ்­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. சிங்­கப்­பூ­ரில் சிக்­கிக்­கொண்ட கொள்­க­லன்­களை வைப்­ப­தற்­காக துவாஸ் துறை­முகத்­தில் செப்­டம்­பர் மாதம் 2,000 இரு­பது அடி­கொண்ட இருப்பு இடங்­கள் திறந்­து­வி­டப்­பட்­டன.

துவாஸ் துறை­மு­கத்­தின் முதல் கட்ட கட்­டு­மா­னத்­தின் பரப்­ப­ளவு, 773 காற்­பந்­துத் திடல்­க­ளுக்­குச் சம­மா­கும். இதன் மொத்த பரப்­பளவு 414 ஹெக்­டர்.

ஓர் ஆண்­டில் சிங்­கப்­பூர் கையாளக்­கூ­டிய இருப்பு இடங்­களுக்கு இந்த முதல் கட்ட கட்­டு­மா­னம் மேலும் உதவி புரிந்­தி­டும்.

கட்­டு­மா­னங்­கள் அனைத்­தும் முடி­வ­டை­யும் நிலை­யில் துவாஸ் துறை­மு­கம் தற்­போ­தைய நிலை­யுடன் ஒப்­பி­டு­கை­யில் மேலும் 50% இருப்பு இடங்­க­ளைக் கையாள முடி­யும்.

நேற்று நடை­பெற்ற நினை­வேந்­தல் நிகழ்ச்­சி­யில், போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன் கலந்­து­கொண்டு பேசி­னார்.

கடந்த ஈராண்­டாக கொவிட்-19 கொள்­ளை­நோய் ஏற்­ப­டுத்­திய தடங்­க­லுக்­குப் பிறகு, துவாஸ் துறை­மு­கத்­தின் முதல் கட்ட பணி­கள் முடி­வ­டைந்­தி­ருப்­பது, கடும் உழைப்­பால் விளைந்­தது என்­றார் அவர். முதல் கட்ட வேலை­கள் ஆறு ஆண்­டு­க­ளுக்கு முன் தொடங்­கின. இதற்­காக 450க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் பங்­காற்­றி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

"துன்ப காலத்­தில் நமது மீள்­தி­றனை வெளிப்­ப­டுத்­தும் குறிப்­பிடத்­தக்க ஒரு மைல்­கல் இது," என்­றார் திரு ஈஸ்­வ­ரன்.

முதல் கட்ட பணி­க­ளுக்­கான இடத்­தில் 70%, நில­மீட்­பின்­வழி கிடைத்­தது என்று எம்­பிஏ குறிப்­பிட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!