‘சிடிசி’ பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்ட ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்கள்

$100 பெறு­மா­ன­முள்ள சமூக மேம்­பாட்டு மன்ற (சிடிசி) பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­பட்டு ஒரு மாதத்­துக்­குள் ஒரு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட சிங்­கப்­பூர் குடும்­பங்­கள் அவற்­றைப் பெற்­றுக்­கொண்­ட­ன.

இது­வரை ஏறத்­தாழ $28 மில்­லி­யன் பெறு­மா­ன­முள்ள பற்­றுச்

­சீட்­டு­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அன்­றா­டச் செல­வு­க­ளைக் குறைக்­க­வும் கொவிட்-19 நெருக்­கடி­நி­லை­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள குடி­யி­ருப்­புப் பேட்­டைக் கடைக்­

கா­ரர்­கள், உண­வங்­காடி நிலையக் கடைக்­கா­ரர்­கள் ஆகி­யோ­ருக்கு ஆத­ரவு வழங்­க­வும் இந்த $130 மில்­லி­யன் திட்­டம் கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் 13ஆம் தேதி­யன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

எந்­தெந்த கடை­கள் பற்­றுச்­சீட்டு­ களை ஏற்­கின்­றன என்­பதை தெரிந்துகொள்­வதை எளி­தாக்க சிடிசி பற்­றுச்­சீட்டு Merchants Go Where இணை­யப்­பக்­கத்­தில் இரு

­வ­ழித் தொடர்பு வரை­ப­டம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இது­கு­றித்து நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

தற்­போ­துள்ள தேடு­தல் அம்­சம் அஞ்­சல் குறி­யீடு, சாலை­யின் பெயர் ஆகி­ய­வற்றை மைய­மா­கக் கொண்­டவை.

இத்­திட்­டத்­தில் 12,500க்கும் மேற்­பட்ட குடி­யி­ருப்­புப் பேட்டை வர்த்­த­கர்­களும் உண­வங்­காடி நிலையக் கடைக்­கா­ரர்­களும் பங்­கெ­டுக்­கின்­ற­னர். இவர்­களில் 90 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்­டோர் குறைந்­தது ஒரு­மு­றை­யா­வது சிடிசி பற்­றுச்­சீட்­டைப் பயன்­ப­டுத்தி பரி­வர்த்­தனை செய்­துள்­ள­தாக கலா­சார, சமூக, இளை­யர்துறை மற்­றும் வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் லோ யென் லிங் தெரி­வித்­துள்­ளார்.

"இது­வரை $28 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான சிடிசி பற்­றுச்­சீட்­டைப் பயன்­ப­டுத்தி குடி­யி­ருப்­புப் பேட்டை உண­வங்­கா­டி நிலையக் கடைக்­கா­ரர்­க­ளுக்­கும் வர்த்­த­கர்­க­ளுக்­கும் சிங்­கப்­பூ­ரர்­கள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­னர் என்று தெரிய வரும்­போது மிக­வும் மகிழ்ச்­சி­யாக உள்­ளது," என்று திரு­வாட்டி லோ கூறி­னார். சிடிசி பற்­றுச்­சீட்­டுத் திட்­டம் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

400,000 குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்கு உதவ இந்தத்­

திட்­டம் தொடங்­கப்­பட்­டது.

தற்­போது வழங்­கப்­பட்­டுள்ள சிடிசி பற்­றுச்­சீட்­டு­களை இவ்­வாண்டு டிசம்­பர் மாதம் 31ஆம் தேதி வரை பயன்­ப­டுத்­த­லாம்.

1.3 சிங்­கப்­பூர் குடும்­பங்­க­ளுக்கு இந்­தப் பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பெறும் குடும்­பத்­தைச் சேர்ந்த ஓர் உறுப்­பி­ னர் இணை­யம் மூலம் தங்­கள் சிங்­பாஸ் கணக்­கைப் பயன்­ப­டுத்தி கைபே­சி­யில் இணைப்பு ஒன்­றைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

இந்த இணைப்பை குடும்ப உறுப்­பி­னர்­க­ளு­டன் தக­வல் பரி­மா­றும் செய­லி­கள் மூலம் பகிர்ந்­து­கொள்­ள­லாம். $2, $5, $10 ஆகிய பிரி­வு­களில் பற்­றுச்­சீட்­டு­கள் உள்­ளன.

இணைப்­பைக் கிளிக் செய்து, பயன்­ப­டுத்த விரும்­பும் தொகை­யைத் தேர்ந்­தெ­டுத்து வர்த்­த­க­ரி­டம் கியூ­ஆர் குறி­யீட்­டைக் காட்ட வேண்­டும். வர்த்­த­கர் RedeemSG Merchant செய­லி­யைப் பயன்

­ப­டுத்தி கியூ­ஆர் குறி­யீட்டை ஸ்கேன் செய்­வார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!