போதைப்பொருள் குற்றங்கள்; சிங்கப்பூரர்கள் மூவர் கைது

போதைப்­பொ­ருள் குற்­றங்­களில் ஈடு­பட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் சிங்­கப்­பூ­ரர்­கள் மூவரை மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு நேற்று முன்­தி­னம் மாலை கைது செய்­தது.

அதி­கா­ரி­கள் நடத்­திய அதி­ர­டிச் சோத­னை­யில் மொத்­தம் 423 கிராம் 'ஐஸ்' எனப்­படும் ஒரு­வகை போதைப்­பொ­ருள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. அதன் தோராய மதிப்பு $63,000. போதைப்­பொ­ருளை உட்­கொள்­ளப் பயன்­ப­டுத்­தப்­படும் உபகரணங்களும் $19,100 ரொக்­க­மும் 115 போதை மாத்­தி­ரை­களும் இரண்டு இரு­மல் மருந்துப் புட்­டி­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

நேற்று முன்­தி­னம் புக்­கிட் பாத்­தோக் ஸ்தி­ரீட் 52ல் 37 வயது ஆட­வரை மத்­திய போதைப்­பொருள் ஒழிப்­புப் பிரி­வைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் கைது செய்­த­னர். அவ­ரி­டம் ஒரு கிராம் 'ஐஸ்' வகை போதைப்­பொ­ருள் இருப்­பதை அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­த­னர்.

புக்­கிட் பாத்­தோக் அவென்யூ 4ல் உள்ள அவ­ரது வீட்­டில் இருந்த 110 போதை மாத்­தி­ரை­களும் இரண்டு இரு­மல் மருந்துப் புட்­டி­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

அதே நாள் மாலை­ புக்­கிட் பாத்­தோக் ஸ்தி­ரீட் 52 அரு­கில் 29 வயது ஆட­வர் கைது செய்­யப்­பட்­டார்.

அதே வட்­டா­ரத்­தில் உள்ள ஒரு வீட்­டில் 30 வயது பெண் ஒரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­டார்.

போதைப்­பொ­ருள் குற்­றங்­கள் தொடர்­பா­கக் கைது செய்­யப்­பட்ட இந்த மூவ­ரி­டம் அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­து­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!