மின்னஞ்சல் மோசடி; ஆணையம் எச்சரிக்கை

அண்­மை­யில் ஓசி­பிசி வங்கி வாடிக்­கை­யா­ளர்­களில் சிலர் குறுந்­த­க­வல் மூலம் ஏமாற்­றப்­பட்­ட­னர். தற்­போது அதே­போன்ற மின்­னஞ்­சல் மூல­மாக ஏமாற்­றும் வேலையை ஏமாற்றுக்கார்­கள் கையில் எடுத்­துள்­ள­னர்.

சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யத்­தின் பெய­ரில் (இராஸ்) அனுப்­பப்­படும் மோசடி மின்­னஞ்­சல் குறித்து ஆணை­யம் எச்­ச­ரித்­துள்­ளது. இராஸ் அமைப்பின் ஆணை­யர் இங் வாய் சூங் பெய­ரும் இடம்­பெற்­றுள்­ளது. மைக்­ரோ­சா­ஃப்ட் நிறு­வ­னத்­தின் இணை நிறு­வ­ன­ரான பில் கேட்­சி­ட­மி­ருந்து இரு­பது மில்­லி­யன் டாலரை உங்­க­ளு­டைய வங்­கிக் கணக்கு மாற்ற முடி­ய­வில்லை. இத­னால் பில் கேட்ஸ் அற­நி­று­வ­னத்­தி­ட­மி­ருந்து உறுதி கடி­தத்­தைப் பெற வேண்­டும் அல்­லது பணத்தை மாற்­று­வ­தற்­கான அங்­கீ­கா­ரத்­தைப் பெற வேண்­டும் என்று அந்த மோசடி மின்­னஞ்­சல் தெரி­விக்­கிறது.

இதனை புறக்­க­ணிக்­கு­மாறு சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் நேற்று அறி­வு­றுத்­தி­யது.

"தய­வு­செய்து அந்த மின்­னஞ்­சலுக்­குப் பதில் அளிக்க வேண்­டாம். தனிப்­பட்ட விவ­ரங்­க­ளைத் தெரி­விக்க வேண்­டாம். பணம் எதை­யும் செலுத்த வேண்­டாம். அந்த மின்­னஞ்­ச­லைப் பின்­பற்றி நடக்க வேண்­டாம்," என்று ஆணை­யம் வலி­யு­றுத்­தி­யது.

அப்­படி ஏதா­வது நடந்­தி­ருந்­தால் காவல்­து­றை­யில் புகார் அளிக்­கும் ­ப­டி அது கேட்­டுக்கொண்­டது.

கடந்த மாதம் ஓசி­பிசி வங்­கி­யைச் சேர்ந்த 470க்கும் மேற்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­கள் குறுந்­த­க­வல் மூலம் ஏமாற்­றப்­பட்­ட­னர்.

இதில் சிக்­கிய வாடிக்­கை­யா­ளர்­கள் குறைந்­தது 8.5 மில்­லி­யன் வெள்­ளியை இழந்­த­னர்.

ஆனால் நல்­லெண்­ணத்­தின் அடிப்­ப­டை­யில் வாடிக்­கை­யா­ளர்­கள் இழந்த பணத்தை வங்கி திருப்­பி­யளிக்கும் என்று ஓசி­பிசி வங்கி தெரி­வித்­தது.

இந்த மோசடி ஓய்­வ­தற்கு முன்பே மின்­னஞ்­சல் மூலம் மேலும் ஒரு மோசடி தொடங்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு நவம்­ப­ரி­லும் மற்­றொரு மோசடி மின்­னஞ்­சல் குறித்து ஆணை­யம் எச்­ச­ரித்­தி­ருந்­தது. அதில் கணினி கிரு­மி­யு­டன் ஓர் ஆவ­ணம் இைணக்­கப்­பட்­டி­ருந்­தது. 'சிங்­கப்­பூர் அர­சாங்க வரு­வாய் ஆணை­யம்' என்று குறிப்­பி­டப்­பட்ட அந்த மின்­னஞ்­ச­லில் வரி செலுத்­தப்­ப­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதற்கு முன்பு மே மாதம் அனுப்பப்பட்ட மோசடி மின்­னஞ்­ச­லில் வரி ஏய்ப்­புக்­காக முழு அப­ரா ­தத்தை பெற்றுள்ளதாகவும் வங்­கிக் கணக்கு ஒன்­றைத் ெதாடங்க வேண்டும் அல்­லது வங்­கிக் கணக்கு விவ­ரங்­க­ளு­டன் பதி லளிக்க வேண்டும் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் வரி செலுத்­தா­ததற்கு அப­ரா­தம் கட்ட வேண்­டும் என்று கூறி அனுப்­பப்­பட்ட வாட்ஸ்­ஆப் தக­வல் குறித்­தும் ஆணை­யம் எச்­ச­ரித்­தி­ருந்­தது.

இந்நிலை­யில் வரி செலுத்­து­வோ­ரின் வரி விவ­ரங்­க­ளும் வரி தொடர்­பான எச்­ச­ரிக்­கை­களும் மின்­னஞ்­சல் மூலம் அனுப்பப்படு வதில்லை என்று ஆணை­யம் கூறி­யது.

தொலை­பேசி வழி­யாக வங்­கிக் கணக்கைத் திறக்க வேண்­டும் என்றோ கடன் அட்டை அல்­லது வங்­கிக்கணக்கு விவ­ரங்­களை சரி பார்க்க வேண்­டும் என்றோ கேட்கப் ­ப­டு­வ­தில்லை என்றும் ஆணை­யம் நினைவூட்டியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!