‘ஆன்டிபயாட்டிக்’ உட்கொண்டபின் வயிற்றுப்போக்கு ஏற்பட காரணம்

மருத்­து­வர் பரிந்­து­ரைத்த நுண்­ணு­யிர்க்­கொல்லி (ஆன்­டி­ப­யாட்­டிக்) மருந்தை உட்­கொண்ட பிறகு ஒரு­வ­ருக்கு வயிற்­றுப்­போக்கு ஏற்­பட்­டால் அதற்கு அவ­ரது குட­லில் உள்ள நுண்­ணு­யிர்த்­தொ­குதி கார­ண­மாக இருக்­கக்­கூ­டும்.

மனி­த­னின் செரி­மான மண்­ட­லத்­தில் வாழும் பாக்­டீ­ரி­யங்­கள், பூஞ்­சை­கள் போன்ற பல்­வேறு நுண்­ணு­யிர்­க­ளின் தொகு­தியே அது. அத்­தொ­கு­தி­யில் 'ஃபீக்கலி­பாக்­டீ­ரி­யம் பிராட்ஸ்­நிட்­ஸியை' எனும் பாக்­டீ­ரி­யத்­தின் அளவு குறை­வாக இருந்­தால், நுண்­ணு­யிர்க்­கொல்லி மருந்து எடுத்­துக்­கொண்ட பிறகு ஒரு­வ­ருக்கு வயிற்­றுப்­போக்கு ஏற்­ப­டு­வ­தற்­கான அபா­யம் அதி­கம் என்று ஆய்­வில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

மனி­த­னின் செரி­மான மண்­ட­லத்­தில் அதி­க­மா­கக் காணப்­படும் நுண்­ணு­யி­ரி­களில் எஃப். பிராட்ஸ்­நிட்ஸி­யை­யும் ஒன்று.

சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை மற்­றும் சிங்­கப்­பூர்-எம்­ஐடி ஆய்வு, தொழில்­நுட்­பக் கூட்­ட­ணி­யைச் (Smart) சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் இணைந்து இந்த ஆய்வை மேற்­கொண்­ட­னர்.

கடந்த 2019ஆம் ஆண்­டில் நான்கு வார காலத்­திற்கு இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. நல்ல உடல்­நி­லை­யு­டன் காணப்­பட்ட 30 பேர் மூன்று நாள்­க­ளுக்கு 'ஆக்­மென்­டின்' மாத்­தி­ரையை எடுத்­துக்­கொள்­ளும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர்.

அந்த ஆய்­வுக்­கா­லத்­தில் அவர்­க­ளின் மலம் சேக­ரிக்­கப்­பட்டு, ஆய்­விற்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது. எளிய பிசி­ஆர் பரி­சோ­தனை முறை­யைக் கொண்டு, மலத்­தில் இருந்த எஃப். பிராட்ஸ்­நிட்­ஸியை நுண்­ணு­யி­ரி­யின் அளவு கண்­ட­றி­யப்­பட்­டது.

பரிசோதனையில் அந்த பாக்­டீ­ரி­யம் குறிப்­பிட்ட அளவு குறை­வாக இருந்­த­வர்­களுக்கு வயிற்றுப்­போக்கு ஏற்­பட்­டது கண்­ட­றி­யப்­பட்­டது.

இதற்கு, நார்ச்சத்து அடங்கிய உணவு ஒரு தீர்வாக அமையலாம்.

"நார்ச்­சத்­து­மிக்க உணவை உட்­கொள்­வது எண்­ணற்ற பலன்­களை வழங்­கும். குடல்­ந­லத்­தைப் பேண இதுவே சிறந்த பரிந்­து­ரை­யாக இருக்­கும்," என்­றார் ஆய்­வா­ளர்­களில் ஒரு­வ­ரான பேரா­சிரி­யர் எரிக் ஜே. ஆல்ம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!