வீவக திட்டங்களுக்கான $1பி. மதிப்புள்ள பசுமைப் பத்திரங்கள்

அர­சாங்­கத் துறை­யில் வீட­மைப்­புத் திட்­டங்­க­ளுக்­கும் இதர கட்­டு­மானத் திட்­டங்­க­ளுக்­கும் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் முதன்­மு­றை­யாக சுமார் ஒரு பில்­லி­யன் வெள்ளி மதிப்­புள்ள பசு­மைப் பத்­தி­ரங்­களை வழங்­கி­யுள்­ளது.

நீடித்த நிலைத்­தன்மை அம்­சங்­களைக் கடைப்­பி­டிப்­ப­தன் தொடர்­பி­லான இலக்­கு­களை அடை­ய­வும் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த தீர்­வு­களுக்­கான 'கிரீன் ஃபைனான்ஸ்' எனும் பசுமை நிதி­யைப் பயன்­ப­டுத்­த­வும் சிங்­கப்­பூர் எண்­ணம் கொண்­டுள்­ளது. இதைக் கருத்­தில்­கொண்டு பசு­மைப் பத்­தி­ரங்­கள் வழங்கப்பட்டுள்ளன.

தேவைக்கேற்ப கட்டப்படும் 'பார்க் ரெசி­டன்­சஸ்@தெங்கா', யூ டீயில் அமை­யும் சிங்­கப்­பூ­ரி­ன் இரண்­டா­வது 'வெர்ட்­டிக்­கல் கம்­போங்' எனும் ஒருங்­கி­ணைந்த குடியிருப்புத் திட்­டம் ஆகி­யவை இந்த ஏற்­பாட்­டினால் பலனடையும் திட்­டங்­களில் சில. வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் வெளி­யிட்ட செய்தி அறிக்­கை­யில் இந்த விவ­ரங்­கள் குறிப்­பி­டப்­பட்­டன.

இந்தப் பசு­மைப் பத்­தி­ரங்­க­ளு­டன் வருங்­கா­லத்­தில் மேலும் சில பத்­தி­ரங்­கள் வழங்­கப்­ப­ட­லாம். இவற்­றின் மூலம் திரட்­டப்­படும் நிதி­யைக் கொண்டு 30 புதிய வீட­மைப்­புத் திட்­டங்­கள் அமைக்கப்படலாம் என்று கழ­கம் தெரி­வித்­தது.

பசு­மைப் பத்­தி­ரங்­கள், சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த தீர்­வு­களை வழங்­கும் திட்­டங்­க­ளுக்கு நிதி வழங்க வகை­செய்­யும். அவற்­றின் மூலம் முத­லீட்­டா­ளர்­க­ளுக்­குக் கட்­ட­ணம் வழங்­கப்­படும்.

அந்­தக் கட்­ட­ணம், குறிப்­பிட்ட தொகை­யா­கவோ சிறு கட்­ட­ணங்­களா­கவோ வழங்­கப்­ப­ட­லாம்.

கட்­டட, கட்­டு­மான ஆணை­யத்­தின் 'கிரீன் மார்க் செர்­டி­ஃபிக்­கேஷன்' என்­ற­ழைக்­கப்­படும் பசு­மைக் குறி முறை­யில் குறிப்­பிட்ட அங்­கீ­கா­ரத்­தைப் பெறும் திட்­டங்­களுக்­குப் பசு­மைப் பத்­தி­ரங்­க­ளின் மூலம் திரட்­டப்­படும் நிதி­யைப் பயன்­ப­டுத்­த­லாம் என்று கழ­கம் கூறி­யது. ஆகச் சிறந்த சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த தீர்­வு­களைக் கொண்ட திட்­டங்­க­ளுக்கு இந்த அங்­கீ­கா­ரம் வழங்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!