கொவிட்-19 தளர்வுகளால் சுற்றுலா நிறுவனங்கள் நிம்மதி

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தும் அர­சாங்­கத்­தின் அண்­மைய அறி­விப்பு உள்­ளூர் சுற்­றுலா நிறு­வ­னங்­களை உற்­சா­க­ம­டைய வைத்­துள்­ளது.

நல்ல தரு­ணத்­தில் இந்த அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ள­தாக சுற்றுலா நிறு­வ­னங்­கள் கரு­து­கின்­றன.

உள்­ளூர் சுற்­று­லாவை மேம்­ படுத்­து­வ­தற்­காக சிங்­கப்­பூரை மீண்­டும் ரசிப்­ப­தற்­கான 'சிங்­கப்­பூர் ரீடிஸ்­க­வர்ஸ்' 100 வெள்ளி பற்­றுச்­சீட்டு ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ருக்­கும் வழங்­கப்­பட்­டது.

இம்­மா­தத்­து­டன் இந்த பற்­றுச்­சீட்டு கால­ாவ­தி­யா­வ­தால் அத­னைப் பயன்­ப­டுத்­து­வோர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­க­லாம் என எதிர்­பார்க்கப்­ ப­டு­கிறது.

ஆனால் சுற்­றுலா நிறு­வ­னங்­களின் முன்­ப­தி­வு­களை இது பாதிக்­கும் என கூறப்­ப­டு­கிறது.

இந்தத் தருணத்தில் சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­கள் தளர்த்தப்பட்டு உள்ளதால் உள்­ளூர் சுற்­றுலா நிறு­வ­னங்­கள் நிம்­மதி அடைந்­துள்­ளன.

இருந்­தா­லும் தளர்த்­தப்­படும் கட்டுப்­பா­டு­க­ளால் உட­னடி பலன் ஏற்­ப­டாது என்று சில சுற்­றுலா நிறு­வ­னங்­கள் கூறு­கின்­றன.

கடந்த வியா­ழக்­கி­ழமை அன்று முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக் கொண்ட அனைத்­துப் பய­ணி­களும் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய அனு­ம­திக்­கப்படு­வார்­கள் என அர­சாங்­கம் அறி­வித்­தது.

இப்­படி வரும் பய­ணி­க­ளுக்கு தனிமை உத்­த­ரவு கிடை­யாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு குறிப்­பிட்ட சில நாடு­க­ளைச் சேர்ந்த பய­ணி­கள் மட்­டுமே சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

புதிய அறி­விப்­பி­னால் கடந்த ஆகஸ்ட் மாதம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட தடுப்­பூசி போட்­டுக் கொண்­டோ­ருக்­கான பய­ணப் பாதைத் திட்­டம் முடி­வுக்கு வரு­கிறது.

வரும் ஏப்­ரல் 1ஆம் தேதி­யி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரில் நுழை­யும் பயணி­ க­ளுக்கு கொவிட்-19 சோத­னை­களும் நிறுத்­தப்ப­டு­கின்­றன.

'ஓரி­யண்­டல் டிரா­வல் அண்ட் டூர்ஸ்' நிறு­வ­ன­ரான ஸ்டான்லி பூ, 'விடி­எல்' பய­ணத் திட்­டம் நடை­ மு­றை­யில் இருந்­தா­லும் குறிப்­பிட்ட சில விமா­னங்­கள் மட்­டுமே சேவை வழங்­கி­யது என்றும் சிங்­கப்­பூ­ரில் நுழை­வ­தற்­கான கட்­டுப்­பா­டு­களால் பய­ணி­கள் தயக்­கம் காட்­டி­ய­தா­கவும் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரர்­கள் இம்­மா­தம் இறுதி வரை உள்­ளூர் சுற்­றுலாத் தலங்­கள், பய­ணங்­கள் மற்­றும் ஹோட்­டல் அறை­க­ளுக்கு 'சிங்­கப்­பூர் ரீடிஸ்­க­வர்ஸ்' பற்­றுச்­சீட்டை பயன்­ப­டுத்த முடி­யும்.

ஆனால் அதற்கு டிசம்­பர் மாதமே முன்­ப­திவு செய்­தி­ருக்க வேண்­டும்.

சென்ற வியா­ழக்­கி­ழமை பேசிய போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ர் எஸ். ஈஸ்­வ­ரன், தற்­போ­தைய 18.2 விழுக்­காட்­டி­லி­ருந்து பய­ணி­க­ளின் எண்­ணிக்­கையை இவ்­வாண்டு, குறைந்­தது 50 விழுக்­காட்­டுக்கு அதி­கரிப்­பதே தளர்­வு­க­ளின் முக்­கிய நோக்­கம் என்று கூறி­யி­ருந்­தார்.

இத­னைச் சுட்­டிக்­காட்­டிய திரு பூ, இது பெரிய ஊக்­கு­விப்­பாக இருக்­காது என்றார்.

இருந்தாலும் ஒன்­றுமே இல்­லா­த­தற்கு இது சற்று ஆறுதல் அளிக்கும் என்றார் அவர்.

சிங்­கப்­பூர் ரீடிஸ்­க­வர்ஸ் பற்­றுச் சீட்டு முடி­வ­டை­யும் காலக்­கட்­டத்­தில் தன்­னால் தாக்­குப் பிடிக்க முடி­யும் என்­றும் அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

'டிரைப் டூர்ஸ்' நிறு­வ­னர்­களில் ஒரு­வ­ரான ஜேசன் லோ, புதிய அறி­விப்­பு­கள் வெளி­யா­கும்­போது ஆரம்­பத்­தில் மந்­த­மாகத்தான் இருக்கும் என்றார்.

"சுற்­றுலாப் பய­ணி­கள் பழை­ய­படி இங்கு வரு­வ­தற்கு, குறிப்­பாக குழந்தை­களு­டன் வரும் பய­ணி­கள் அதிகரிப்பதற்கு இன்­னும் சிறிது காலம் ஆக­லாம்.

"இவ்­வாண்டு இறு­தி­யில்­தான் உண்­மை­யான நில­வ­ரம் தெரி­ய ­வரும்," என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!