கொவிட்-19: கட்டுப்பாடுகள் அகன்றாலும் பொறுப்புணர்வு தேவை

முரசொலி

சிங்­கப்­பூ­ரின் கொவிட்-19 பய­ணத்­தில் குறிப்­பி­டத்­தக்க ஒரு மைல்­கல் என்று சொல்­லும் அள­வுக்­குச் சூழ்­நி­லை­கள் ஆக்­க­க­ர­மா­கத் திரும்பி இருக்­கின்றன.

கொரோனா தொற்று சூழ­லைப் பொறுத்­த­வ­ரை­ 2020ஆம்­ ஆண்­டுக்­குப் பிறகு முதன்­முத­லாக ஆரஞ்சு நிலை­யில் இருந்து மஞ்­சள் நிலைக்­குச் சிங்­கப்­பூர் திரும்பி இருக்­கிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமலான கட்­டுப்­பா­டு­களில் கிட்­டத்­தட்ட எல்­லாமே அகற்­றப்­பட்­டு­விட்­டன. இனி­மேல் சமூ­கக் கலந்­துரையாடல்­களில் இவ்­வ­ளவு பேர்­தான் ஈடு­ப­ட­மு­டி­யும் என்ற வரம்பு இருக்­காது. அதே­போல் வேலை இடங்­களுக்கு ஊழி­யர்­கள் எல்­லா­ரும் திரும்­ப­லாம்.

வேலை இடத்­தி­ல் ஒரு­வ­ரோடு ஒருவர் நேரடி­யாக அணுக்கத் தொடர்பு இல்­லா­த­பட்­சத்­தில் ஊழி­யர்­கள் முகக்­க­வ­சம் அணி­ய­வும் தேவை­யில்லை.

சேஃப் எண்ட்ரி, டிரேஸ்­டு­கெ­தர் இரண்­டின் பயன்­பாடும் பெரும்­பா­லான இடங்­களில் இராது.

என்­றா­லும்­கூட 500 பேருக்­கும் அதி­க­மா­னோர் கலந்­து­கொள்­ளும் நிகழ்ச்­சி­கள், நட­னம் அனு­ம­திக்­கப்­படும் இரவு நேர­க் கே­ளிக்கை விடு­தி­கள், உண­வகங்­கள், உண­வங்­கா­டி­கள் உள்ளிட்ட உணவு, பான நிலை­யங்­களில் அவை நடப்­பில் இருக்­கும்.

வீட்­டிற்கு வரும் விருந்­தி­னர்­க­ளுக்கு அளவு வரம்­பும் இருக்­காது. தனிப்­பட்­ட­வர்­கள், குழுக்­களுக்கு இடை­யில் பாது­காப்பு இடை­வெளி நிபந்­த­னை­யும் அக­லும். பெரிய நிகழ்ச்சி­களில் இவ்­வ­ளவு பேர்தான் கலந்­து­கொள்­ள­லாம் என்ற வரம்­பும் இராது. வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான சமூக வருகை அனு­மதி வரம்பு அதி­க­ரிக்­கப்­படும்.

மே 1 முதல் எல்­லை கடந்த பேருந்­துச் சேவை கள், டாக்சி சேவை­கள் மீண்­டும் தொடங்­கும் என்று அறி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக நம்மை பாது­காத்­துக்கொள்ள நடப்­புக்கு வந்த கட்­டுப்­பாடு­களில் அநே­க­மாக எல்­லாம் அகன்­று­விட்­டன.

உட்­புற நிகழ்ச்­சி­களில் முகக்­க­வ­சத்தை அணி­ய­வேண்­டும் என்ற விதி­ மட்டும் தொடர்ந்து நடப்­பில் இருந்து வரும் என்று சுகா­தார அமைச்சு அறி­வித்து இருக்­கிறது.

கொரோனா தொற்று 2019 டிசம்­ப­ரில் தலைகாட்டி கடந்த இரண்­டாண்­டு­களில் உலகை படா­த­பாடு படுத்­தி­விட்­டது. சிங்­கப்­பூ­ரர்­கள் இது­வரை சந்­தித்­தி­ராத வகை­யில் வாழ்க்கை பாணி­யையே மாற்­றிக்­கொள்ள வேண்­டிய அள­வுக்குக் கட்­டுப்­பாடு­கள் இடம்­பெற்­றன. மக்­களும் அர­சாங்­க­மும் ஒன்­றா­கச் சேர்ந்து செயல்­பட்­டன.

இத­னால் ஒவ்­வொ­ரு­வ­ரும் பாது­காக்­கப்­பட்டு வாழ்­வா­தா­ரம் காக்­கப்­பட்­டது. உல­கி­ல் கொவிட்-19 மர­ணம் ஆகக் குறை­வான நாடு­களில் சிங்­கப்­பூரும் ஒன்று என்ற சாதனை நிகழ்த்­தப்­பட்­டது.

முகக்­க­வ­சம், தடுப்­பூசி, பாது­காப்பு இடை­வெளி விதி­மு­றை­கள் உள்­ளிட்ட பல்­வேறு நடை­மு­றை­கள் கார­ண­மாக கிரு­மித்­தொற்று ஒடுங்­கத் தொடங்­கி­விட்­டதை அடுத்து வழக்­க­மான நிலைக்கு வருவதற்கு வகை­செய்­யும் அள­வில் இது­வரை இல்­லாத அள விற்கு இப்­போது கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு இருக்­கின்­றன.

இது உடனடியாக ஒரே நேரத்தில் நடந்தது அல்ல. சிங்­கப்­பூர் படிப்­ப­டி­யாக கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்தி வரு­கிறது. அவற்றில் ஒன்றாக சிங்கப்பூர்- மலே­சிய எல்லை ஏப்­ரல் 1ஆம் தேதி முற்­றி­லும் திறக்­கப்­பட்­டது. கடந்த இரண்­டாண்டு கால­மாக பிரிந்தே கிடந்த மக்­கள் மிக உற்­சா­க­மாக, ஆவ­லாக எல்லை கடந்து சென்று வந்து மகிழ்ந்து வரு­வதைக் காண முடிகிறது.

சிங்­கப்­பூர்-மலே­சிய எல்லை திறப்பு வழக்­க­மான ஒரு நிலை திரும்­பி­விட்­டது என்ற ஓர் எண்ணத்தை இரு பக்­க­மும் ஏற்­ப­டுத்­தி இருக்கிறது.

இர­வு­நேர கேளிக்கை விடு­தி­க­ளுக்­கான கட்டுப்­பா­டு­கள் தளர்­வ­தால் அந்­தத் துறை உள்­ளூர் மக்­களை மட்­டு­மின்றி வெளி­யூர் பய­ணி­க­ளை­யும் அதிகம் ஈர்க்­கும். இதனால் பொரு­ளி­ய­லுக்குப் புதிய வேகம் கிடைக்­கும் என்­றும் எதிர்­பார்க்­க­லாம்.

இந்­தத் துறை­யைச் சேர்ந்­த­வர்­க­ளுக்­கும் எதிர்­கா­லத்­தில் நம்­பிக்கை ஏற்­ப­டக்­கூ­டிய ஒரு சூழல் திரும்பி இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரில் இன்­னும் சில மாதங்­கள் கழித்­து­தான் ஃபார்முலா ஒன் கிராண்ட் ப்ரிக்ஸ் கார் பந்­த­யம் நடக்­க­வி­ருக்­கிறது என்­றா­லும் நுழை­வுச்­சீட்­டு­கள் பர­ப­ரப்­பாக விற்­கப்­பட்­டு­விட்­டன.

இவை எல்­லாம் வழக்­க­மான நிலைக்­குத் திரும்ப சிங்­கப்­பூ­ரர்­கள் எந்த அள­வுக்கு ஆர்­வம் கொண்டு இருக்­கி­றார்­கள் என்­பதைப் புலப்­ப­டுத்­து­வ­தாக உள்ளன.

கொவிட்-19க்கு எதிரான போரில் இந்த அளவுக்கு வெற்றியைச் சாதிக்க ஒவ்­வொ­ரு­வரும் தங்­கள் பங்கை ஆற்றி உதவி இருக்­கி­றார்­கள்.

இருந்­தா­லும்­கூட கொவிட்-19 கிருமி முற்­றி­லும் ஒடுங்­கி­வி­ட­வில்லை என்­பதைச் சிங்­கப்­பூ­ரர்­கள் மன­தில் கொள்ள வேண்­டும்.

புதிய உரு­மா­றிய கிருமி தலை­தூக்­கும் வாய்ப்பும் ஆபத்­தும் இன்­ன­மும் இருக்­கின்­றன. அது எப்­போது என்று கணிக்க முடி­யாத சூழ்­நிலை இருக்கிறது. அப்­ப­டிப்­பட்ட ஒரு நிலை ஏற்­ப­டும்­போது மறு­படி­யும் கட்­டுப்­பா­டு­கள் நடப்­புக்கு வரலாம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

கிரு­மித்­தொற்று பெரிய அள­வில் ஏற்­ப­டும்­போது அதை வெற்­றி­க­ர­மான முறை­யில் சமா­ளிக்­கத் தேவை­யான பல அம்­சங்­களை இந்­தத் தொற்று மூலம் நாம் கற்­றுக்­கொண்டு இருக்­கி­றோம்.

கிருமித்தொற்றைத் தவிர்த்துக்கொள்ள, அது பரவுவதைத் தடுக்க என்னென்ன முன்­னெச்­ச­ரிக்கை செயல்­கள் தேவை என்பது இப்போது நமக்குத் தெரியும். அவற்­றில் பெரும்­பா­லா­னவை மக்­க­ளுக்கு இப்­போது பொது­வான நடை­மு­றை­யா­கி­விட்­டன.

ஆகை­யால் எதிர்­கா­லத்­தில் இத்­த­கைய பெரிய அள­வி­லான தொற்று ஏற்­ப­டும்­போது அதைச் செவ்­வனே சமா­ளித்­து­வி­ட­லாம் என்ற ஆற்­றல் நம்­மி­டம் முன்­பை­விட இப்­போது அதி­க­மாக இருக்­கிறது.

வெளி­யில் செல்­லும்போது முகக்­க­வ­சம் கட்­டா­ய ­மா­னது அல்ல என்­றா­லும்­கூட பெரும்­பா­லா­ன­வர்கள் முகக்­க­வ­சம் அணிந்து செல்­வதைப் பார்க்க முடி­கிறது. இப்படிப்பட்ட பொறுப்பு உணர்வுடன் மக்கள் நடந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

கொவிட்-19 கிருமி இனி உல­கை­விட்டு அகலாது. அது சளிக்­காய்ச்­சல் போன்ற தொற்­று­நோ­யா­கத் தொடரும். அதோ­டு­தான் நாம் வாழ்ந்­தாக வேண்டும் என்ற ஒரு சூழலில், கிருமி தொற்­று­வதை எப்­ப­டி­யெல்­லாம் தவிர்த்­துக்­கொள்­ள­லாம் என்­பதில் முன்பைவிட நாம் இப்போது தெளிவாக இருக்கிறோம்.­

இந்த அனுகூலத்துடன், பலத்துடன், தொடர்ந்து தனிப்பட்ட, சமூகப் பொறுப்­பு­டனும் நடந்­து­கொண்டு கொவிட்-19க்கு முந்­திய காலத்­தைப் போன்ற முற்றி­லும் வழ­மை­யான வாழ்க்கைக்குத் திரும்ப நாம் அனைவரும் உறுதிபூணுவோம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!