சிராங்கூன் சென்ட்ரலில் தீ, ஒருவர் மருத்துவமனையில்

சிராங்கூன் சென்ட்ரலில் தீ, ஒருவர் மருத்துவமனையில்

1 mins read
62350df5-8f6d-4a3c-bbe2-79344048fbab
சிராங்கூன் சென்ட்ரல் டிரைவில் தீ மூண்டது. படம்: எஸ்ஷேனிஸ்எல்எஸ்ஹெச் / டிக்டோக் -

சிராங்கூன் சென்ட்ரல் டிரைவில் உள்ள புளோக் ஒன்றில் வெள்ளிக்கிழமை (மே 13) நள்ளிரவு 1.20 மணிக்குத் தீ மூண்டது.

புகையை நுகர்ந்த ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

261 சிராங்கூன் டிரைவின் முதல் மாடியில் உள்ள காப்பி் கடையின் அசுத்தக் காற்றை வெளியிடும் குழாய்க்கும் தீக்கும் தொடர்பிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தீச் சம்பவத்தின் காணொளி ஒன்று டிக்டோக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

சம்பவ இடத்திற்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் வருவதற்கு முன்னரே சுமார் 20 பேர் அவ்விடத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்.

பிடோக் நார்த்தில் மூவரைப் பலிவாங்கிய தீச் சம்பவத்தைத் தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.