‘புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஓமிக்ரான் துணைத் திரிபுகள் பற்றி பீதியடைய வேண்டியதில்லை’

ஓமிக்­ரான் வகை கொவிட்-19 கிருமி பர­வ­லாக பர­வும் தன்­மை­யைக் கொண்­டுள்­ள­தால், ஓமிக்­ரான் துணைத் திரி­பு­கள் உரு­வெடுக்­க­வும் அது வித்­திட்­டுள்­ளது.

அந்த வகை­யில், சிங்­கப்­பூ­ரில் பிஏ.4, பிஏ.5 ஓமிக்­ரான் துணைத் திரி­பு­கள் சிங்­கப்­பூ­ரில் முதன்­மு­றை­யாக கண்டறி­யப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அறி­வித்­தி­ருந்­தது.

எனி­னும், இது­கு­றித்து மக்­கள் தேவை­யின்றி பீதி­ய­டைய வேண்­டாம் என்று நிபு­ணர்­கள் கூறி­யுள்­ள­னர்.

பிஏ.4, பிஏ.5 துணைத் திரி­பு­கள் குறித்து இது­வரை தெரி­ய­வந்­துள்ள விஷ­யங்­கள் என்­னென்ன என்­பது பற்றி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் விவ­ரிக்­கிறது.

ஓமிக்ரான் துணைத் திரிபுகளில் ஏன் இத்தனை வகை உள்ளன?

ஓமிக்­ரான் வேக­மா­கப் பர­வி­ உள்­ளது. எனவே, அதன் தன்மை தொடர்ந்து உரு­மாற அதற்­குப் பல சந்­தர்ப்­பங்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டு உள்ளன. பிஏ.1, பிஏ.2, பிஏ.3, பிஏ.4, பிஏ.5 உள்­ளிட்­டவை இத்­த­கைய துணைத் திரி­பு­களில் அடங்­கும்.

பிஏ.4, பிஏ.5 துணைத் திரிபுகள் வேறு எங்கெல்லாம் கண்டறியப்பட்டுள்ளன?

இவை 12க்கும் மேற்­பட்ட நாடு­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக, தென்­னாப்­பி­ரிக்­கா­வில் இவை அதிக அள­வில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன.

சிங்கப்பூரில் பிஏ.4, பிஏ.5 துணைத் திரிபுகளால் இதுவரை எத்தனை பேருக்குப் பாதிப்பு?

சுகா­தார அமைச்சு நடத்­திய கண்­கா­ணிப்­புப் பரி­சோ­த­னை­யில், இரு­வ­ருக்கு பிஏ.4 திரி­பும் ஒரு­வ­ருக்கு பிஏ.5 திரி­பும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு அமைச்சு தெரி­வித்­தது.

அந்த மூவ­ரி­ட­மும் அறி­கு­றி­கள் தென்­ப­ட­வில்லை அல்­லது லேசான அறி­கு­றி­களே தென்­பட்­டன. அவர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­ப­ட­வில்லை. கொவிட்-19க்கு எதி­ராக முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்டுக்­கொண்ட அவர்­கள், கூடுதல் (பூஸ்­டர்) தடுப்­பூ­சி­யை­யும் போட்டுக்­கொண்­ட­வர்­க­ளா­வர்.

சிங்­கப்­பூ­ரில் பிஏ.4, பிஏ.5 பர­வல் தொடர்ந்து கண்­கா­ணிக்­கப்­படும் என்று அமைச்சு கூறி­யது.

நாம் கவலைப்பட வேண்டுமா?

பிஏ.1 அல்­லது இதர துணைத் திரி­பு­க­ளால் தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களை மீண்­டும் தொற்­று­வ­தில் பிஏ.4, பிஏ.5 துணைத் திரி­பு­க­ளுக்கு ஆற்­றல் இருப்­ப­தாக சில ஆதா­ரங்­கள் கூறு­கின்­றன.

இத்­த­கைய துணைத் திரி­பு­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களை­யும் தொற்­றக்­கூ­டும் என்ற கவ­லை­யும் உள்­ளது.

என்­றா­லும், இந்­தத் துணைத் திரி­பு­கள் கண்­ட­றி­யப்­ப­டு­வது ஏற்­கெ­னவே எதிர்­பார்க்­கப்­பட்ட ஒன்று­தான். அதே­போல, புதுப்­புது துணைத் திரி­பு­கள் தொடர்ந்து கண்­ட­றி­யப்­பட்டு, அவை ஒரு கட்­டத்­தில் புது தொற்று அலை­க­ளுக்கு வித்­தி­டும்.

ஆனா­லும், இவற்­றால் மக்­கள் தேவை­யின்றி பீதி­ய­டைய வேண்டி­ இருக்­காது என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சாவ் சுவீ ஹாக் பொதுச் சுகா­தா­ரப் பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசி­ரி­யர் அலெக்ஸ் குக் விவ­ரித்­தார்.

"இவ்­விரு விஷ­யங்­களில் ஒன்று நடந்­தால், எதிர்­கா­லத்­தில் கொவிட்-19 அலை­கள் எழும் என்­பதை நாங்­கள் எதிர்­பார்க்­கி­றோம். ஒன்று, நோயெ­திர்ப்­பாற்­றல் குறை­வது. மற்­றொன்று, கிருமி தொடர்ந்து உரு­மா­று­வது.

"என்­றா­லும், கிரு­மிக்கு எதி­ரான நோயெ­திர்ப்­பாற்­றல் குறைந்­தா­லும், கடும் நோய்ப் பாதிப்­புக்கு எதி­ரான பாது­காப்பு மெது­வா­கத்­தான் குறை­யும் என்­பதே எதிர்­பார்ப்பு.

"எனவே, முதல் சில கிரு­மித்­தொற்று அலை­களில் ஏற்­பட்­ட­தைப்­போல, சுகா­தா­ரக் கட்­ட­மைப்பு மீதான சுமை அள­வு­க­டந்து போகாது என்­பதே எதிர்­பார்ப்பு," என்­றார் பேரா­சி­ரி­யர் குக்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!