$330 மி. கூடுதல் நிதி ஒதுக்க ‘ஓசிபிசி’க்கு உத்தரவு

'ஓசி­பிசி' வங்கி சென்ற ஆண்டு டிசம்­பர் மாதம் நடந்த 'எஸ்­எம் எஸ்' மோசடி தொடர்­பில் எடுத்வத நவடிக்கையில் ஏற்­பட்ட கோளா­று­களை நிவர்த்தி செய்ய கூடு­த­லாக 330 மில்­லி­யன் வெள்ளி மூல­த­னத்­துக்கு நிதி ஒதுக்­கும்­படி சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

வங்­கி­யின் வாடிக்­கை­யா­ளர்­கள் 790 பேர் சென்ற ஆண்டு நடந்த மோச­டி­யில் பாதிக்­கப்­பட்­ட­னர். அவர்­கள் மொத்­தம் 13.7 மில்­லி­யன் வெள்­ளியை இழந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

நல்­லெண்ண அடிப்­ப­டை­யில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அவர்­கள் இழந்த முழுத் தொகை­யை­யும் வங்கி ஈடு செய்­தது.

அதன் பிறகு வங்­கி­யின் நடை­மு­றை­கள், கட்­ட­மைப்பு ஆகி­யவை தொடர்­பில் சுயேச்­சை­யான மறு­ஆய்வு செய்­யப்­பட்­டது. அதில் அபா­யங்­களை அடை­யா­ளம் காணு­தல், பணப் பரி­வர்த்­த­னைக்கு முன்­ன­ரும் அதன் பின்­பும் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய கட்­டுப்­பா­டு­கள், புகார்­க­ளைக் கையாள்­தல், வாடிக்­கை­யா­ளர்­களுக்­குப் பதி­ல­ளிக்க எடுத்­துக்­கொள்­ளப்ப்­படும் நேரம் போன்­றவை தொடர்­பில் குறை­பா­டு­கள் கண்­ட­றி­யப்­பட்­டன.

ஆணை­யத்­தின் மதிப்­பீ­டும் சுயேச்சை தரப்­பின் ஆய்வு மதிப்­பீ­டும் ஒத்­துப்­போ­ன­தா­கக் கூறப்­பட்­டது. அந்­தக் குறை­பா­டு­களை நிவர்த்தி செய்­வ­தன் தொடர்­பில் 'ஓசி­பிசி' வங்கி நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­வ­தா­க­வும் கூறப்­பட்­டது.

இத­னைக் கருத்­தில் கொண்டு கூடு­தல் நிதி ஒதுக்க ஆணை­யம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

அடை­யா­ளம் காணப்­பட்ட குறை­பா­டு­கள் அனைத்­தை­யும் வங்கி நிவர்த்தி செய்­த­தாக ஆணை­யம் ஏற்­றுக்­கொண்­டால், அதன் பிறகு கூடு­தல் நிதி ஒதுக்­கீட்டு வரம்பு குறித்து மறு­ஆய்வு செய்­யப்­படும்.

நிதி நிறு­வ­னங்­கள் மோச­டிச் சம்­ப­வங்­க­ளைத் தடுத்­தல், கண்­டு­பி­டித்­தல், அவற்­றைக் கையாள்­தல் ஆகி­யவை தொடர்­பில் வலு­வான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டி­யது கட்­டா­யம் என்று ஆணை­யம் கூறி­யது. மோச­டிச் சம்­ப­வங்­கள் நடந்­தால் அந்த நட­வ­டிக்­கை­கள் செயல்­தி­ற­னு­டன் விளங்­கு­வ­தும் முக்­கி­யம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!