கோழி உணவுவகைகளின் விலை அதிகரிப்பு

கோழி இறைச்­சி­யைக் கொண்ட உண­வு­வ­கை­க­ளின் விலை உயர்ந்து வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கோழி இறைச்சி ஏற்­று­ம­திக்கு மலே­சியா தற்­கா­லி­கத் தடை விதித்­துள்­ளது. இந்­தத் தடை இம்­மா­தம் 1ஆம் தேதி­யன்று தொடங்­கி­யது.

இதை­ய­டுத்து சில உண­வுக் கடை­கள் அவற்­றின் உணவு­

வ­கை­க­ளின் விலையை உயர்த்­தி­யுள்­ளன. சில கடை­கள் விலையை உட­ன­டி­யாக உயர்த்­தா­மல் பொறுத்­தி­ருந்து பார்க்­கின்­றன.

தீவெங்­கும் எட்­டுக் கோழிச் சோறு கடை­களை வைத்­தி­ருக்­கும் பிர­பல பூன் டோங் கீ நிறு­வ­னம் அதன் பிர­தான 'பாயில்ட் சிக்­கன்' உண­வு­வ­கை­யின் விலையை 15 காசு அதி­க­ரித்­துள்­ளது. அந்த உண­வு­வ­கை­யின் விலை தற்­போது $36.

குறிப்­பிட்ட அளவு கோழி இறைச்சி மட்­டுமே கிடைப்­ப­தால் ஒவ்­வொரு பூன் டோங் கீ கடை­யி­லும் 50லிருந்து 70 வரை­யி­லான 'பாயில்ட் சிக்­கன்' மட்­டுமே விற்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. கோழி இறைச்சி விநி­யோ­கம் செய்­யும் நிறு­வ­னங்­கள் அவற்­றுக்­கான விலை­களை உயர்த்­தி­யுள்­ள­தால் உண­வு­வ­கை­க­ளின் விலையை அதி­க­ரிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக பூன் டோங் கீ நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர் ஜேசன் தியாம் கூறி­னார்.

கோழிச் சோற்­றின் விலையை ஐந்து விழுக்­காட்­டி­லி­ருந்து பத்து விழுக்­காடு வரை உயர்த்த இருப்­ப­தாக சியா ஸ்தி­ரேட்­டில் உள்ள சிங் சுவீ கீ கடை­யின் செயல்­முறை இயக்­கு­நர் எலிஸ் பாங் தெரி­வித்­தார்.

ஜூ சியாட்­டில் உள்ள டிக்­சன் நாசி லெமாக் கடை ஒரு மாதத்­துக்கு மூடப்­பட்­டுள்­ளது. கோழி இறைச்சி ஏற்­று­ம­திக்கு மலே­சியா விதித்­துள்ள தடை முடி­வுக்கு வந்­தால் அடுத்த மாதம் 1ஆம் தேதி­யன்று வியா­பா­ரத்தை மீண்­டும் தொடங்க அது விரும்­பு­கிறது.

இந்­நி­லை­யில், கோழி இறைச்­சிக்­கான விலை அதி­க­ரித்­துள்­ள­போ­தி­லும் தங்­க­ளது உண­வு­

வ­கை­க­ளின் விலை­களில் எவ்­வித மாற்­ற­மும் இருக்­காது என்று சில உண­வ­கங்­கள் தெரி­வித்­துள்­ளன. இவற்­றில் லிட்­டில் இந்­தி­யா­வில் உள்ள கன்­சாமா தண்­டூர் உண­வ­க­மும் ஒன்று.

"எங்­கள் உண­வ­கத்­துக்­குப் பல வாடிக்­கை­யா­ளர்­கள் வரு­கின்­ற­னர். அத­னால் வியா­பா­ரம் சீராக உள்­ளது. எனவே ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளத்­தைக் குறைப்­பது, உண­வின் தரத்­தைக் குறைப்­பது போன்ற மாற்­றங்­களை நாங்­கள் செய்­ய­மாட்­டோம்," என்று கன்­சாமா தண்­டூர் உண­வ­கத்­தின் நிர்­வா­கப் பங்­கா­ளி­யான ராக்­கேஷ் குமார் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!