சிங்கப்பூர்-துருக்கி உணவு இறக்குமதி விரிவாக்கம்

துருக்­கி­யில் இருந்து வேளாண், உண­வுப் பொருள்­களை இறக்­கு­மதி செய்­வதை விரி­வு­ப­டுத்­து­வது தொடர்­பில் சிங்­கப்­பூ­ரும் துருக்­கி­யும் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளன.

துருக்­கி­யத் தலை­ந­கர் அங்­கா­ரா­வில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­ கிருஷ்­ண­னும் துருக்­கிய வெளி­யு­றவு அமைச்­சர் மெவ்­லுட் கவு­சோ­கு­லு­வும் பங்­கேற்­ற­னர்.

இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்­து­வது குறித்­தும் வர்த்­த­கம், முத­லீடு ஆகி­யவை குறித்­தும் இரு அமைச்­சர்­களும் கலந்­து­ரை­யா­டி­ய­தாக சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­தது.

சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் துருக்­கி­யில் நீண்­ட­கால அடிப்­ப­டை­யில் முத­லீடு செய்­துள்­ள­தாக அமைச்சு கூறி­யது. கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லின்­போ­தும் இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான வர்த்­த­கம் சென்ற ஆண்டு 50 விழுக்­காடு உயர்ந்­த­தா­க­வும் அது குறிப்­பிட்­டது.

துருக்­கி­யின் ஆகப் பெரிய துறை­மு­க­மான மெர்­சின் துறை­மு­கத்தை சிங்­கப்­பூர்த் துறை­முக ஆணை­யம் நிர்­வ­கித்து வரு­கிறது.

ஆசி­யா­வுக்­கும் ஐரோப்­பா­வுக்­கும் இடை­யி­லான முக்­கி­யச் சந்­திப்பு நடு­வ­மாக துருக்கி ஆற்­றக்­கூ­டிய உத்­தி­பூர்வ பங்­க­ளிப்பு குறித்­தும் டாக்­டர் விவி­யன் துருக்­கிய அமைச்­ச­ரு­டன் பேச்சு நடத்­தி­னார்.

உக்­ரே­னி­யப் போர் குறித்­தும் இரு தலை­வர்­களும் கருத்­துப் பரி­மா­றிக்­கொண்­ட­னர்.

உக்­ரே­னி­யத் துறை­மு­கங்­களில் இருந்து தானி­யங்­க­ளைப் பாது­காப்­பான முறை­யில் ஏற்­று­மதி செய்­வ­தற்கு உரிய தீர்­வு­காண்­ப­தில் துருக்கி மேற்­கொண்ட முயற்சி­க­ளுக்கு டாக்­டர் விவி­யன் பாராட்டு தெரி­வித்­த­தா­க­வும் சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்சு கூறி­யது. ஆசி­யா­னுக்­கும் துருக்­கிக்­கும் இடை­யி­லான ஆழ­மான பங்­கா­ளித்­து­வத்தை அமைச்­சர் விவி­யன் வர­வேற்­ற­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!