50 புதிய நடமாடும் தடுப்பூசி மையங்கள் திறக்கப்படலாம்

சிங்கப்பூர் முழுவதும் 50 புதிய நடமாடும் தடுப்பூசி மையங்கள் வரை எழுப்பப்படவுள்ளன.

மூத்தோர் எளிதில் தடுப்பூசி போட்டுக்கொள்ள இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

அவற்றில் முதல் மூன்று தடுப்பூசி மையங்கள் திங்கட்கிழமையன்று (27 ஜூன்) திறக்கப்பட்டன.

அவை நீ சூன் சென்ட்ரல், திலோக் பிளாங்கா, அன்சார் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.

புதிதாக எழுப்பப்படவுள்ள நடமாடும் தடுப்பூசி மையங்களில் 39, ஜூலை மாத இறுதிக்குள் படிப்படியாக திறக்கப்படும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலனவை வசிப்போர் குழு நிலையங்களில் அமைந்திருக்கும்.

நடமாடும் தடுப்பூசி மையங்கள் வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணியிலிருந்து 11.30 மணி வரைக்கும் பிற்பகல் ஒரு மணியிலிருந்து ஐந்து மணி வரைக்கும் திறந்திருக்கும்.

அவற்றில் ஃபைசர்-பயோஎன்டெக் கொவிட்-19 தடுப்பூசி போடப்படும்.

இந்த தடுப்பூசி மையங்கள் குறிப்பாக மூத்தோருக்கென திறக்கப்பட்டாலும் இவற்றில் யார் வேண்டுமானாலும் எல்லா கொவிட்-19 தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ளலாம்.

முன்பதிவு செய்யத் தேவையில்லை.

மூத்தோரில் 80,000 பேர் தங்களின் முதல் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் சென்ற வாரம் தெரிவித்திருந்தார்.

அந்த எண்ணிக்கை 70,000க்குக் குறைந்துள்ளதாக திங்கட்கிழமையன்று (27 ஜூன்) அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!