‘என் மகன் மிகுந்த வலிமையுடன் போராடினான்’

கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழந்த ஒன்றரை வயதுக் குழந்தை குறித்து தந்தை

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்த ஒன்­றரை வய­துக் குழந்தை ஸாஹிர் ரயீஸ் அலி, தனது இறுதி நாள்­களில் உயிர் தரிக்­கப் போரா­டி­ய­தாக அதன் தந்தை கூறி­யி­ருக்­கி­றார்.

நேற்று முன்­தி­னம் சிங்­கப்­பூ­ர­ரான ஒன்­றரை வயது ஆண் குழந்தை கொவிட்-19 நோய்த்­தொற்­றால் மாண்­ட­தா­கச் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தி­ருந்­தது.

இது­கு­றித்­துக் குழந்­தை­யின் தந்தை ஃபராத் ஷிபா, "உயி­ருக்­குப் போரா­டிய வலி­மை­யும் வீர­மும் மிக்க எனது மகன் இன்று மர­ணத்­துக்­குப் பிந்­திய உல­கிற்­குச் சென்­று­விட்­டான்," என்று தமது 'லிங்க்ட்­இன்' பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

'என்­செ­ஃபா­லி­டிஸ்' எனப்­படும் மூளை வீக்­கத்­தால் இந்­தக் குழந்தை உயி­ரி­ழந்­த­தாக அமைச்சு குறிப்­பிட்­டது. பரி­சோ­த­னை­யில் குழந்­தைக்கு கொவிட்-19 கிரு­மி­யு­டன் மேலும் இரண்டு கிரு­மி­கள் தொற்­றி­யது தெரி­ய­வந்­த­தாக அது கூறி­யது.

இம்­மா­தம் 21ஆம் தேதி இரவு, கடு­மை­யான காய்ச்­ச­லு­டன் சில­முறை வலிப்பு ஏற்­ப­டவே 'கேகே' சிறார், மக­ளிர் மருத்­து­வ­ம­னை­யின் அவ­ச­ரச் சிகிச்­சைப் பிரி­வுக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்ட குழந்தை பின்­னர் சுய­நி­னைவை இழந்­தது. மறு­நாள் குழந்­தை­க­ளுக்­கான தீவிர சிகிச்­சைப் பிரி­வுக்கு மாற்­றப்­பட்­டது.

பிள்­ளை­யின் மூளை வீங்­கி­யி­ருப்­ப­தா­கக் கூறிய மருத்­து­வர்­கள் அத­னைச் சரி­செய்ய ஏதும் செய்ய இய­லாது என்­றும் தெரி­வித்­த­னர். இத­னை­ய­டுத்து மூளை நரம்­பி­யல் மருத்­து­வர் அல்­லது வேறு மருத்­துவ நிபு­ண­ரைத் தொடர்­பு­கொள்ள உத­வி­கேட்டு தந்தை ஃபராத் இணை­யத்­தில் பதி­விட்­டி­ருந்­தார்.

கிரு­மித்­தொற்­றால் சிங்­கப்­பூ­ரில் 12 வய­துக்­குக் கீழான குழந்தை உயி­ரி­ழந்­தது இதுவே முதல்­முறை.

இத­னை­ய­டுத்து ஐந்து வய­துக்­குக் கீழான குழந்­தை­க­ளுக்கு கொவிட்-19 தடுப்­பூ­சி­யின் பாது­காப்பு, செயல்­தி­றன் ஆகி­யவை குறித்த ஆவ­ணங்­களை மருந்து உற்­பத்­தி­யா­ளர்­கள் சமர்ப்­பித்த பிறகு அது­கு­றித்து ஆய்வு செய்­யப்­படும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

உயி­ரி­ழந்த குழந்­தை­யின் குடும்­பத்­தி­ன­ருக்கு ஆழ்ந்த இரங்­க­லைத் தெரி­வித்­துக்­கொண்­டது சுகா­தார அமைச்சு. இந்­த­வே­ளை­யில் தேவைப்­படும் ஆத­ரவை வழங்க 'கேகே' மக­ளிர், சிறார் மருத்­து­வ­மனை அவர்களுடன் தொடர்­பில் இருப்­ப­தா­க­வும் அது கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!