தேசிய தின அணிவகுப்பில் முக்கிய காட்சியை இயக்கும் பாங்

இவ்­வாண்டு தேசிய தின அணி­வ­குப்­பின் முக்­கிய காட்சி அங்­கத்தை பழுத்த திரை­ய­ரங்க அனு­ப­வ­சா­லி­யான ஏட்­ரி­யன் பாங் இயக்­கு­கி­றார்.

கடந்த இரண்டு ஆண்டு கொவிட்-19 தொற்­றுக்­கா­லத்தை சிங்­கப்­பூர் கடந்து வந்த பாதை­யை­யும் பொதுச் சுகா­தார நெருக்­க டி­­யி­லி­ருந்து மீண்டு வந்­த­தை­யும் கொண்­டா­டும் வகை­யில் இந்த அங்­கம் இடம்­பெ­றும்.

பாங்ெட­மோ­னி­யம் எனும் உள்­ளூர் நிறு­வ­னத்­தின் இணை நிறு­வ­ன­ரான 56 வயது பாங், 'த ஸ்டோரி ஆஃப் அஸ்' அங்­கத்தை இயக்­கு­கி­றார்.

மரினா பே மிதக்­கும் மேடை­யில் 25,000 முதல் 26,000 வரை­யி­லான பார்­வை­யா­ளர்­கள் முன்­னி­லை­யில் இந்­தக் காட்சி நேர­டி­யாக அரங்­கேறு கிறது. இதே காட்சி மில்­லி­யன் கணக்­கா­ன­வர்­க­ளுக்கு தொலைக்­காட்சி வழி­யா­க­வும் நேரடி ஒளி­ப­ரப்பு செய்­யப்­ப­டு­கிறது.

கடந்த சில மாதங்­க­ளாக 2,000க்கும் மேற்­பட்ட கலை­ஞர்­கள் இதற்­காக ஒத்­திகை பார்த்து வரு­கின்­ற­னர்.

ஒப்­ப­னைக் கலை­ஞர்­கள், பார்­வை­யா­ளர்­களை ஊக்­கு­விப்­பது உட்­பட 1,300க்கும் மேற்­பட்ட இளை­யர்­களும் இதில் பங்­கேற்­கின்­ற­னர். தேசிய தின அணி­வ­குப்பு வர­லாற்­றில் இவ்­வாண்டு ஆக அதிக இளை­யர்­கள் பங்­கேற்­கின்­ற­னர்.

முதல் முறை­யாக தேசிய தின அணி­வ­குப்­பின் முக்­கிய காட்சி அங்­கத்தை இயக்­கும் திரு பாங், கடந்த இரண்டு ஆண்­டு­க­ளின் சிர­மங்­களை ஏற்­றுக்­கொள்­ளும் அதே சம­யத்­தில் எதிர்­கா­லத்தை நம்­பிக்­கை­யு­டன் எதிர்­கொள்­வதே இவ்­வாண்­டின் சவால்­மிக்க கொண்­டாட்­ட­மா­கும் என குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!