7,000 மின்திரைகளில் மின்னும் தேசிய தின காட்சிகள்

சிங்கப்பூர் முழுவதும் வெளிப்புறங்களில் இருக்கின்ற 7,000க்கும் மேற்பட்ட மின்திரைகளில் கடந்தகால தேசிய தின அணிவகுப்புகளைக் காட்டும் 200 படங்கள் திரையிடப்படுகின்றன,

அத்தகைய மின்திரைகள், 313@ சோமர்செட், ஜெம், விவோசிட்டி, பல்வேறு ஃபேர்பிரைஸ் கடைகள் போன்ற இடங்களில் எடுப்பாக அமைந்துள்ளன.

எம்ஆர்டி வட்டப்பாதை, கிழக்கு-மேற்கு வழித்தடம், வடக்கு-தெற்கு வழித்தடம் ஆகியவற்றில் அமைந்துள்ள 92 எம்ஆர்டி நிலையங்களிலும் படங்களைக் காணலாம்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் படங்கள், எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் நிறுவனத்தின் ஆவணக் காப்பகத்தின் படங்கள். முதல் தேசிய தின அணிவகுப்பு நடந்த 1966ஆம் ஆண்டு முதல் அவை கடந்தகால வரலாற்றைக் காட்டுகின்றன.

அந்தப் படங்களை எடுத்தவர்கள், தமிழ்முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ் பாவ், ஷின் மின் டெய்லி நியூஸ், பெரித்தா ஹரியான் ஆகியவற்றைச் சேர்ந்த படக் கலைஞர்கள்.
அந்தக் கண்காட்சி ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடக்கும்.

ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை வெளிப்புற மின்திரைகள் அனைத்தும் இந்த ஆண்டு அணிவகுப்பின் சிறப்புகளைக் காட்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!