பாதுகாவல் அதிகாரியை தாக்கியதாக ஆடவர் மீது விசாரணை; சிங்கப்பூரில் 25வது சம்பவம்

தலை­யைப் பிடித்­துத் தள்­ளு­வது, அறை­வது, கழுத்­தைப் பிடித்து இழுப்­பது எனப் பாது­கா­வல் அதி­காரி ஒரு­வர் அறி­மு­க­மில்­லாத நப­ரால் தாக்­கப்­பட்ட சம்­ப­வம் கடந்த திங்­களன்று நடந்­தது.

புக்­கிட் பாத்­தோக் ஸ்தி­ரீட் 41ல் அமைந்­துள்ள கூட்­டு­ரிமை வீட்டு பாது­கா­வல் அதி­காரி திரு அஃபின்டி முகம்­ம­து­வைத் தாக்­கி­ய­ சந்­தே­கத்­தின் பேரில் 45 வயது ஆட­வர் ஒரு­வ­ரைக் காவல் அதி­கா­ரி­கள் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

நள்­ளி­ரவு வேளை­யில் 55 வயது திரு அஃபின்டி, இன்­னொரு பாது­கா­வல் அதி­கா­ரி­யு­டன் கூட்­டு­ரிமை வளா­கத்தை வலம்­வந்த பிறகு மின்­தூக்­கி­யில் தாக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. தாக்­கி­ய­வர் மது போதை­யில் இருந்­த­து­போல் தமக்­குத் தோன்­றி­ய­தா­க­வும் அவர் திட்­டி­யது தமக்­குப் புரி­ய­வில்லை என்­றும் திரு அஃபின்டி குறிப்­பிட்­டார். தம் ஐந்­தாண்டு பாது­கா­வல் பணி­யில் இவ்­வாறு தாக்­கப்­பட்­டது இதுவே முதல் முறை என்று பகிர்ந்­து­கொண்­டார் திரு அஃபின்டி.

காவ­லர்­கள் சம்­ப­வத்­தைப் பற்றி தக­வல் அறிந்து வரு­வ­தற்­குள் தாக்­கி­ய­தா­கக் கூறப்­படும் நபர் அங்­கி­ருந்து தலை­ம­றை­வா­கி­விட்­ட­தாக பாது­கா­வல் ஊழி­யர்­கள் தொழிற்­சங்­கம் (யுஎஸ்இ) தெரி­வித்­தது.

தாக்கியவர் அந்த கூட்­டு­ரிமை வளா­கத்­தைச் சேர்ந்த குடி­யி­ருப்­பா­ளர் என்­றும் நம்­பப்­ப­டு­கிறது. மூன்று நாள்­கள் மருத்­துவ விடுப்­பில் இருக்­கி­றார் திரு அஃபின்டி.

பாது­கா­வல் அதி­கா­ரி­கள் தாக்­கப்­ப­டு­வது தொடர்­பில் இது­வரை இவ்­வாண்­டில் 25 சம்­ப­வங்­களை யுஎஸ்இ கையாண்­டுள்­ள­தா­கக் கூறப்­பட்­டது. கடந்த ஆண்டு முழு­வ­தும் 9 சம்­ப­வங்­களே பதி­வான நிலை­யில், இத்­த­கைய தாக்­கு­தல் சம்­ப­வங்­க­ளின் அதி­க­ரிப்பு கவலை அளிக்­கும் ஒன்­றாக உள்­ளது என்­றது யுஎஸ்இ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!