பொங்கோல் ஃபீல்டு கொலைச் சம்பவம்: ஆடவருக்கு ஆயுள் தண்டனை, பிரம்படி

தமது தந்தை குடும்­பத்தை நிரா­க­ரித்­து­விட்டு சென்ற நாள் மற்­றும் தேசிய சேவை­யி­லி­ருந்து தாம் வெளி­யேற்­றப்­பட்ட நாள் இவ்­வி­ரண்­டும் நிகழ்ந்த மே மாதம் 10ஆம் தேதி­யன்று அந்த நினை­வு­கள் தம்மை அலைக்­க­ழித்த சம­யம் அதைப் போக்­கு­வ­தற்­காக சுராஜ்ஸ்ரீ­கன் திவா­கர் மணி திரி­பாதி மடக்­கக்­கூ­டிய ஒரு கத்­தியை எடுத்­துக்­கொண்டு இர­வு­நேர மெது­வோட்­டத்­துக்­குச் சென்­றார்.

மெது­வோட்­டத்­தின்­போது கால் தடுக்கி அவர் கீழே விழுந்­தார். அத­னால் கோபம் கொண்ட சுராஜ் ஸ்ரீகன் தம்­மைத் தாண்டி ஓடிக்­கொண்­டி­ருந்த முன்­பின் அறி­மு­க­மில்­லாத ஒரு­வ­ரைத் தாக்க முடி­வெ­டுத்­தார்.

இப்­போது 22 வய­தா­கும் சுராஜ் ஸ்ரீக­னுக்கு நேற்று ஆயுள் தண்­ட­னை­யும் 15 பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்­டன. அந்த ஆட­வ­ரின் மர­ணம் தொடர்­பில் தம் மீது சுமத்­தப்­பட்ட குற்­றத்தை சுராஜ்ஸ்ரீ­கன் ஒப்­புக்­கொண்­டார். அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர்­கள் அந்­தச் செயலை நியா­ய­மற்ற கொலை என்று வர்­ணித்­தார்­கள்.

விளை­யாட்­டுப் பொருள்­கள் விற்­கும் கடை­யில் உதவி மேலா­ள­ரான 38 வயது டே ருயி ஹாவ் என்பவரை 2020ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி இரவு 11.08 மணிக்­குக் கத்­தி­யால் குத்­தி­யதை சுராஜ்ஸ்ரீ­கன் ஒப்­புக்­கொண்­டார்.

அன்று இரவு 11.17 மணிக்கு திரு டே, 995 எண்ணை அழைத்து, "நான் பல­முறை கத்­தி­யால் குத்­தப்­பட்­டேன்," என்­றார். அங்கு விரைந்த மருத்­துவ வாக­னம் உட­ன­டி­யாக அவரை செங்­காங் பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­றது. திரு டே கடு­மை­யான காயங்­கள் கார­ண­மாக பின்­னர் மருத்­து­வ­ம­னை­யில் மர­ண­ம­டைந்­தார்.

ஒரு­வ­ருக்கு மர­ணம் விளை­விக்­கும் அளவுக்குக் காயம் ஏற்­ப­டுத்­தும் குற்­றத்­துக்கு மரண தண்­டனை அல்­லது ஆயுள் தண்­ட­னை­யு­டன் பிரம்­ப­டி­யும் விதிக்­கப்­ப­ட­லாம்.

ஆயுள் தண்­ட­னைக்­குத் தங்­க­ளி­ட­மி­ருந்து எவ்­வித ஆட்­சே­ப­ணை­யும் இல்லை என்று கூறிய அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர்­கள், குற்­ற­வா­ளிக்கு 24 பிரம்­ப­டி­கள் விதிக்­கப்­பட வேண்­டும் என்று நீதி­ப­தி­யைக் கேட்­டுக்­கொண்­ட­னர். தற்­காப்­புத் தரப்போ பிரம்­படி கொடுக்­கப்­ப­டக்­கூ­டாது என்று கேட்­டுக்­கொண்­டது.

தண்­டனை விதிப்­பின்­போது பேசிய நீதி­பதி டேடார் சிங் கில், விதிக்­க­கப்­பட்ட இத்­தண்­டனை பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­தின் தீரா துய­ரத்­தைப் போக்­கி­விட முடி­யாது என்­றா­லும் தண்­டனை ஒரு­வித ஆறு­தலை அவர்­க­ளுக்கு அளிக்­கும் என்­றார்.

சுராஜ்ஸ்ரீ­க­னுக்கு மே 10ஆம் தேதி என்­பது வாழ்­நா­ளில் மறக்க முடி­யாத நாளாகி விட்­டி­ருந்­தது.

மே 10ஆம் தேதி 1999ல் அவ­ரது தந்தை, தான் தாயின் கரு­வில் இருந்­த­போது, திரு­ம­ண­மான இரண்டே மாதங்­களில் அவர்­களை விட்டு சென்­று­விட்­டார் என்று தற்­காப்­புத் தரப்பு வழக்­க­றி­ஞர் எட்­மண்ட் பெரேரா தெரி­வித்­தார்.

மே 10ஆம் தேதி 2018ல் தேசிய சேவை­யில் சேர்ந்­தார் சுராஜ்ஸ்ரீ­கன். அதே ஆண்டு அக்­டோ­ப­ரில் தொடர்­புச் சாத­னத்­தைச் சுத்­தி­யல் கொண்டு உடைத்­தற்­காக அவர் உட­லு­று­தித் தகுதி இறக்­கம் செய்­யப்­பட்டு, பின்­னர் தேசிய சேவை­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டார்.

சம்­பவ நாளன்று, தன்­னைத் தாண்டி ஓடிய டேயின் பின்­னால் ஓடி, அவ­ரது முது­கில் சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யின் சுவிஸ் விக்­டோ­ரி­னோக்ஸ் டிரேல்­மாஸ்­டர் கத்­தி­யால் குத்­தி­னார். கீழே விழுந்து, டே பின்­னால் திரும்பி பார்த்­த­போது, சுராஜ்ஸ்ரீ­கன் அவ­ரது கை, நெஞ்சு, வயிற்­றுப் பகு­தி­களில் சர­மா­ரி­யா­கக் குத்­தி­னார்.

அதன் பிறகு அங்­கி­ருந்து ஓடிய சுராஜ்ஸ்ரீ­கன் கத்­தியை மடக்கி தமது பாக்­கெட்­டுக்­குள் வைத்து, கையில் படிந்த ரத்­தக்­க­ரையை ஈர மெல்­லி­ழைத் தாள் கொண்டு துடைத்­துக்­கொண்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

காவல்­து­றை­யின் கண்­கா­ணிப்பு கேம­ராக்­களில் பதிந்த காட்­சி­க­ளின் உத­வி­யு­டன் சுராஜ்ஸ்ரீ­கன் மே 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தாக்கு தலில் பயன்படுத்தப்பட்ட கத்தி அவரது அறையில் இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!