பலதரப்பு பன்னாட்டு முறைக்கு சிறிய நாடுகள் ஆதரவு

முப்­பது சிறிய நடுத்­தர நாடு­கள் கொண்ட குழு, ஐக்­கிய நாட்டு அமைப்­பைச் சுற்­றி இயங்­கும் அனைத்­துத் தரப்­பு­க­ளை­யும் விதி­மு­றை­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட பன்­னாட்டு முறைக்கு தங்­கள் உறு­தி­யான ஆத­ர­வைத் தெரி­வித்­துள்­ளன.

ஐக்­கிய நாட்டு அமைப்­பின் சாச­னத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள சம­நி­லை­யான இறை­யாண்மை, கருத்­து­வே­று­பா­டு­களை அமை­தி­யா­கத் தீர்த்­துக் கொள்­ளுதல் ஆகிய கோட்­பா­டு­களை அந்த நாடு­கள் வலி­யு­றுத்­தின.

மீள்­தி­றன்­மிக்க விநி­யோ­கச் சங்­கி­லி­களும் திறந்த, நியா­ய­மான வர்த்­தக கட்­ட­மைப்பு ஆகி­ய­வற்­றின் தேவையை அந்த நாடு­கள் வலி­யு­றுத்­தின.

உல­க­ளா­விய ஆளு­மைக் குழு என்ற பெயர்­கொண்ட அந்த நாடு­கள் நேற்று முன்­தி­னம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் இவற்­றைக் குறிப்­பிட்­டன.

நியூ­யார்க்­கில் நடை­பெற்று வரும் ஐக்­கிய நாட்டு அமைப்­பின் 77வது பொதுச் சபைக் கூட்­டத்­தின் இடையே அக்­கு­ழு­வின் 15வது அமைச்­சர்­நி­லைக் கூட்­டம் இடம்­பெற்­றது.

புருணை, மலே­சியா, வியட்­னாம், பிலிப்­பீன்ஸ், நியூ­சி­லாந்து, குவைத், லக்சம்பெர்க், ருவாண்டா, உள்­ளிட்ட நாடு­களும் குழு­வில் உள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!