சமூக மன்றத்தில் ஈரச் சந்தை, உணவு அங்காடி நிலைய வசதிகள் 

புதிதாக திறக்கப்பட்ட  ஃபேர்ன்வெல் சமூக மன்றத்தில் ஈரச் சந்தை வசதியோடு, உணவு அங்காடி நிலையமும் அமைந்துள்ளது. ஈரச் சந்தையில் வாங்கும் சமையல் பொருள்களை குறிப்பிட்ட சில உணவு கடைக்காரர்களிடம் கொடுத்தால், அதை அவர்கள் உணவாக சமைத்து தந்து நாம் ருசித்து சாப்பிட்டுச் செல்லும் வசதியையும் மன்றம் அளிக்கிறது. 

இன்று மன்றத்தை அதிகாரபூர்வமாக பிரதமர் லீ சியன் லூங்  திறந்துவைத்தார். குடும்பங்களுக்கு உகந்த ஓர் இடமாக மன்றம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பொது இடங்களில் குடியிருப்பாளர்கள் ஒன்றுகூட சமூக மன்றங்கள் போன்ற பொது கட்டமைப்புகள் முக்கியம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இதை கருத்தில் கொண்டு ஃபேர்ன்வெல் சமூக மன்றம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். 

அங் மோ கியோ குழுத்தொகுதியில் அமைந்துள்ள இந்த சமூக மன்றத்தில் 27 உணவு அங்காடி கடைளுகம், 20 ஈரச் சந்தைக் கடைகளும் உள்ளன. 
24 மணிநேரம் திறந்திருக்கும் உடற்பயிற்சி நிலையம், ஓடுவதற்கு தடம், குழந்தை பராமரிப்பு நிலையம், விளையாட்டுக் கூடம் போன்ற பல வசதிகள் புதிய சமூக மன்றத்தில் உள்ளன. 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!