செய்திகளுடன் தமிழ் முரசு காப்பிக் கடை

மின்­னி­லக்­கத் தளம், சமூக ஊட­கப் பக்­கங்­கள் என விரி­வ­டைந்து வரும் தமிழ் முரசு, தற்­போது வலை­யொ­ளி­யி­லும் கால்­ப­தித்­துள்­ளது.

பிர­பல பொன்­னி­யின் செல்­வன் திரைப்­ப­டத்­தைக் குறித்த கருத்து­க­ளைப் பதிவுசெய்­யும் தமிழ் முரசின் முதல் வலை­யொளி அங்­க­ம் நேற்று முன்தினம் வெளி­யா­னது. இனி மக்­கள் வாரந்­தோ­றும், அர­சி­யல், வாழ்­வி­யல், பண்­பாடு எனப் பல்­வேறு தலைப்­பு­களை அலசி ஆரா­யும் வலை­யொ­ளி­களை எதிர்­பார்க்­கலாம்.

முதல் வலை­யொளி அங்­கத்­தில் விறு­வி­றுப்­பாக கலந்­து­ரை­யா­டிய நால்­வர், பொன்­னி­யின் செல்­வன் நூலை­யும் திரைப்­ப­டத்­தை­யும் ஒப்­பிட்டு, திரை­யு­ல­கி­லும் மக்­க­ளி­டத்­தி­லும் அது பதித்­துள்ள தாக்­கத்­தைப் பற்றிப் பேசி­னர். வரும் வாரங்­களில், தீபா­வளிப் பண்­டி­கை­யைச் சார்ந்த வலை­யொ­ளி­க­ளை­யும் தமிழ் முரசு வாச­கர்­கள் எதிர்­பார்க்கலாம்.

வலை­யொ­ளி­கள் பிர­ப­ல­ம­டைந்­துள்ள தற்­ச­ம­யத்­தில், அவற்றின் மூலம் தமிழ் முரசு செய்­தி­யா­ளர்­கள் தங்­க­ளது தனிப்­பட்ட கருத்துகளை­யும், உள்­ளூர், உலக செய்­தி­க­ளை­யும் முன்­வைக்­க­விருக்கின்­ற­னர்.

தமிழ் முர­சின் வலை­யொளி முயற்­சி­யைக் குறித்து கூறு­கை­யில் தமிழ் முர­சின் மின்­னி­லக்க ஆசி­ரி­யர் திரு தமி­ழ­வேல், “செய்­தி­கள் வாச­கர்­க­ளைத் தேடி செல்­ல­வேண்­டிய காலத்­தில் உள்­ளோம்.

“வலை­யொளி முயற்­சி­க­ளைத் தமிழ் முரசு சற்றே தாம­த­மாக எடுத்­தி­ருந்­தா­லும், தமிழ் முரசு காப்பி கடை மக்­க­ளி­டத்­தில் நல்ல வர­வேற்பு பெறும் என நம்­பு­கி­றோம்,” என்­றார். 88 ஆண்­டு­க­ளாக இயங்கி வரும் தமிழ் முரசு செய்­தித்­தாள், வரும் காலத்­தில் பிர­ப­ல­ம­டை­யும் வெவ்­வேறு தளங்­க­ளி­லும் காலடி எடுத்து வைக்­கும் எண்­ணம் கொண்­டுள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

தமிழ் முரசு காப்பிக் கடை வலை­யொ­ளி­களை, ஸ்பாட்­டிஃபை, யூடி­யூப் தளங்­க­ளி­லும் தமிழ் முர­சின் இணை­யப்­பக்­கத்­தி­லும் காண­லாம்.

- ஸ்பாட்டிஃபை: Tamil Murasu Kopi Kadai

- இணையத்தளம்: https://www.tamilmurasu.com.sg/podcasts

- யூடியூப்: https://youtu.be/4191__ey9Y0

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!