வெஸ்ட்லைட் விடுதியில் தீபாவளிக் கொண்டாட்டம்

குடும்­பங்­களை விட்­டு­விட்டு அயல்­நாட்­டில் பணி­பு­ரி­யும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளு­டன் இணைந்து தீபா­வ­ளியைக் கொண்­டா­டும் வகை­யில், வெஸ்ட்­லைட் ஊழி­யர் விடுதி நேற்று மதி­யம் தீபா­வளிக் கொண்­டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்­பாடு செய்­திருந்தது.

ஏறக்­கு­றைய 120 வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு இணை ஏற்­பாட்­டா­ள­ரான செஞ்சுரியன் நிறு­வ­னத்­தின் மூத்த நிர்­வாக ஊழி­யர்­கள் தோ பாயோ­வில் மதிய உண­வு அளித்­த­னர்.

நோய்ப்­ப­ர­வல் காலத்­தில், தீவெங்­கி­லும் உள்ள ஒன்பது வெஸ்ட்­லைட் விடு­தி­களில் இருந்த ஏறக்­கு­றைய 33,000 ஊழி­யர்­க­ளுக்கு உத­வி­யது வெஸ்ட்­லைட் விடுதி நிர்­வா­கம்.

ஈராண்­டு­க­ளாக, ஊக்கத்துடனும் நம்­பிக்­கை­யு­ட­னும் செய­லாற்­றிய வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்கு நன்றி தெரிவிக்கவும் அவர்களை அங்கீ ­க­ரிக்கவும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் தியா­கங்­களைச் சுட்­டிக்­காட்டி நன்றி பாராட்­டிய செஞ்சுரியன் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்வாக அதி­காரி திரு கோங் சீ மின், ஊழி­யர்­க­ளு­டன் இன்­னும் நெருக்­க­மான முறை­யில் தொடர்­பு­கொண்டு இணைந்து செயல்­ப­டு­வ­தற்­கான வழி­மு­றை­களை செஞ்சுரியன் எடுக்­கும் என்­றும் கூறி­னார்.

இவ்­வாண்டு, வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் நல­னுக்­காக பல முயற்­சி­க­ளை­யும் வெஸ்ட்­லைட் விடுதி ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. விளை­யாட்­டுகள், கலா­சார கலந்­து­ரை­யா­டல்­கள் ஆகி­ய­வற்­றின் மூலம் மட்­டு­மின்றி, பள்­ளி­கள், லாபநோக்கமற்ற அமைப்புகள் ஆகி­ய­வற்­று­டன் ஊழி­யர்­க­ளுக்கு உரை­யா­டு­வ­தற்­கான வாய்ப்­பு­களை வெஸ்ட்­லைட் அளித்­துள்­ள­தாக அது தெரி­வித்­தது.

நிகழ்­வில் கலந்­து­கொண்ட சிங்கப்பூரிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முதலாவது செயலாளர் (வர்த்தகம்) திரு டி. பிர­பா­கர், வெளி­நாட்டு ஊழி­யர்­கள், சமூ­கத்­துக்கு ஆற்­றி­யுள்ள பங்கைப் பாராட்­டும் வகையில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்த செஞ்சுரியன் நிறு­வ­னத்­துக்­கும் வெஸ்ட்­லைட் விடு­திக்­கும் சிங்கப்பூருக்கான இந்­தியத் தூத­ர் திரு பெரி­ய­சாமி கும­ர­னின் சார்­பில் நன்றி தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!