அமைச்சர் இங்: நாட்டின் இறையாண்மையும் நாட்டு மக்களின் பாதுகாப்பும் முக்கிய அம்சங்கள்

நோய்ப்­ப­ர­வ­லுக்கு முன்­பி­ருந்த நிலைக்கு நாம் இனி திரும்­பு­வது சாத்­தி­ய­மில்லை என்­ப­தால், சச்­ச­ரவு­க­ளைத் தடுக்­க­வும் சச்­ச­ர­வு­கள் ஏற்­ப­டும்­போது சிங்­கப்­பூ­ரைப் பாது­காக்­க­வும் நாம் தயா­ராக இருக்­க­வேண்­டும் என்று கூறி­னார் கோ கெங் சுவீ தள­பத்­திய, அதி­கா­ரி­கள் பயிற்சிக் கல்­லூ­ரி­யின் 53வது பட்ட ­ம­ளிப்பு விழா­வில் பேசிய தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென்.

நமது நாட்­டின் இறை­யாண்­மைக்­கும் நாட்டு மக்­க­ளின் பாது­காப்­புக்­கும் பொறுப்­பாக உள்ள ராணுவ வீரர்­கள் இந்த இரண்டு வழி­களில் சிங்­கப்­பூரை பாது­காப்­பது அவ­சியம் என்­றும் அவர் கூறி­னார்.

இவ்­வாண்டு, ஆயு­தப்­படை அதி­கா­ரி­கள், தேசிய சேவை தள­ப­தி­கள், 11 நாடு­க­ளி­லி­ருந்து பன்­னாட்டு அதி­கா­ரி­கள், சிங்­கப்­பூர் காவல்­துறை அதி­காரி ஒரு­வர் என மொத்­தம் 231 பேர் கோ கெங் சுவீ தள­பத்­திய, அதி­கா­ரி­கள் பயிற்சிக் கல்­லூ­ரி­யில் பட்­டம் பெற்­ற­னர்.

இஸ்­தா­னா­வில், தற்­காப்பு அமைச்­ச­ரின் தலை­மை­யில் இடம்­பெற்ற பட்­ட­ம­ளிப்பு விழா கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடந்­தே­றி­யது.

அதி­கா­ரி­களை உயர் பத­வி­களுக்­கா­கத் தயார்ப்­ப­டுத்­தும் கோ கெங் சுவீ தள­பத்­திய, அதி­கா­ரி­கள் பயிற்சிக் கல்­லூரி, சிங்­கப்­பூ­ரில் ஆக உய­ரிய ராணுவ கல்­வியை அளிக்­கிறது.

ஓராண்டு நீடிக்­கும் கல்­வித்­திட்­டத்­தில், அதி­கா­ரி­கள் சமூக விழிப்­பு­ணர்வு, ராணுவத் தொழில்­நுட்­பத்­தைக் கையா­ளும் வழி­மு­றை­கள், தலை­மைத்­துவ அனு­ப­வம் முத­லி­ய­வற்­றில் பயிற்சி மேற்­கொள்­வர்.

பல்­வேறு பத­வி­களில் உள்ள ராணுவ வீரர்­களும் அதி­கா­ரி­களும் ஒன்­றி­ணைந்து செயல்­பட இக்­கல்­வித்­ திட்­டம் வாய்ப்­ப­ளிக்­கிறது.

இவ்­வாண்டுப் பயிற்சியில் உச்­ச­ தேர்ச்சியடைந்து மேன்மைதங்கிய விருதைப் பெற்ற மேஜர் ஜீவா கோபால் கிருஷ்­ணன், சக மாணவ அதி­கா­ரி­க­ளு­டன் நல்ல நட்­பு­ற­வு­களை வளர்த்­துக்­கொண்­டதை நினை­வு­கூர்ந்­தார்.

சமூ­கத்­துக்­குப் பங்­க­ளிக்­கும் வண்­ணம், குறைந்த வரு­மா­ன­முடைய வீடு­களை செப்­ப­னி­டு­வது, பாய்ஸ் டவுன் பள்­ளி­யில் பயி­லும் இளை­யர்­க­ளுக்கு உத­வு­வது ஆகி­ய­வற்­றில் இவர் ஈடு­பட்­டி­ருந்­தார்.

“ஓர் ஆயு­தப்­படை அதி­கா­ரி­யாக, எனது நெறி­க­ளை­யும் நம்­பிக்­கை­களை­யும் சீர்­ப­டுத்த பல வாய்ப்­பு­களைப் பெற்­றுள்­ளேன். மக்­க­ளுக்­கும் ராணு­வத்­துக்­கும் மேம்­பட்ட முறை­யில் நான் பங்­க­ளிப்­பேன் என்ற நம்­பிக்கை என்­னுள் பிறந்­துள்­ளது,” என்­றார் 30 வயது மேஜர் ஜீவா.

கோ கெங் சுவீ தள­பத்­திய, அதி­கா­ரி­கள் பயிற்சிக் கல்­லூ­ரி­யில் பயி­லும் மாண­வர்­கள் கட­மை­யைத் தாண்டி, தியாக உணர்­வு­டன் செயல்­பட்­டுள்­ள­தைப் பாராட்­டிய டாக்­டர் இங் எங் ஹென், அவர்­க­ளது குடும்­பத்­தா­ருக்­கும் உய­ர­தி­கா­ரி­க­ளுக்­கும் தனது நன்­றி­யைத் தெரி­வித்­தார். இத்­த­கைய ஆத­ர­வும் அர்ப்­ப­ணிப்­புமே சிங்­கப்­பூ­ருக்கு மிக அவ­சி­ய­மானது என அவர் வலி­யு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!