தீபாவளிக்குச் சிறப்பு சேர்க்கும் ‘நம்பிக்கை ஒளி’

தீபா­வ­ளியை முன்­னிட்டு மக்­கள் செயல் கட்சி வெளி­யிட்ட ‘நம்­பிக்கை ஒளி’ எனும் இசைக் காணொளி, அன்­பை­யும் நம்­பிக்­கை­யை­யும் முன்­னி­லைப்­ப­டுத்­தி­யுள்­ளது. பல சிக்­கல்­களை எதிர்­கொண்டு வந்த நாம், ஒரு சமூ­க­மா­கக் கடந்­து­வந்த பாதையை மற­வா­மல், ஒன்­றி­ணைந்து செயல்­படு­வதை வலி­யு­றுத்­தும் வண்­ணம் காணொ­ளியை அமைத்­துள்­ளார், இயக்­கு­நர் திரு கே. ராஜ­கோ­பால்.

தீபா­வ­ளிக் கொண்­டாட்­டத்­தைச் சமூ­கத்­துக்­குக் கொண்டு செல்­ல­வேண்­டும் என்ற எண்­ணத்­தோடு தம்­மி­டம் வந்த மக்­கள் செயல் கட்சி­யி­டம், திரு ராஜ­கோ­பால் இசைக் காணொளி வடிவை பரிந்­து­ரைத்­தார். இசையே எல்­லோ­ரின் மன­தை­யும் தொட­வல்­லது என்று அவர் நினைத்­தார். அதற்­கேற்ப, பாடல் வரி­க­ளை­யும் இசை­யை­யும் அமைக்க பாட­லா­சி­ரி­யர் ஜெயா ராதா­கி­ருஷ்­ண­னை­யும் பாட­கர் சுஷ்மா சோமா­வை­யும் அவர் அழைத்­தி­ருந்­தார்.

கொவிட்-19 நோய்ப் பர­வல் காலம், குடும்­பங்­களும் மனி­தர்­களும் அன்பை நினை­வு­கூர்ந்து, வெளிப்­ப­டுத்­திய ஒரு கால­மாக விளங்­கி­யது. அதைப் பதிவு செய்ய, இளை­யர், முதி­யோர், தம்­ப­தி­யர் ஆகி­யோர் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் செய்­து­கொள்­ளும் சிறு சிறு உதவி­களைக் காட்­சிப்­ப­டுத்­தி­யுள்­ளார் இயக்­கு­நர் திரு ராஜ­கோ­பால்.

“முத­லில் சிங்­கப்­பூர் இந்­தி­யர்­களின் முகங்­க­ளைக் காட்டி அவர்­களின் மகிழ்ச்­சி­யைப் பட­மாக்க வேண்­டும் என நினைத்­தேன். பின்­னர், அன்பை வெளிப்­ப­டுத்­தும் செயல்­க­ளைத் தத்­ரூ­ப­மாக காட்­ட­வேண்­டும் என்ற எண்­ணம் ஏற்­பட்­டது. இசைக் காணொ­ளி­யாக மட்டு­மின்றி, ஒரு ஆவ­ணப்­ப­ட­மாக இதை அமைக்க முயற்சி செய்­துள்­ளோம்,” என்­றார் திரு ராஜ­கோ­பால்.

எல்லா பிரச்­சி­னை­க­ளுக்­கு­மான தீர்­வும் அன்­பில் தொடங்­கு­கிறது, ஒன்­றி­ணைந்து நம்­பிக்­கை­யு­டன் செயல்­ப­டு­வது நம்மை முன்­னெ­டுத்­தும் செல்­லும் என்ற புரி­தலை உணர்த்­தும் வகை­யில் ‘நம்­பிக்கை ஒளி’யின் பாடல் வரி­களை அமைக்க முயற்சி செய்­துள்­ளார் பாட­லா­சி­ரி­யர் ஜெயா ராதா­கிருஷ்ணன்.

குறிப்­பாக, ‘அக­வி­ருளே, வில­கி­டவே, மன­தி­னிலே ஒளிச்­சு­டரே’ என்ற பாடல்­வரி, நோய்ப்­ப­ர­வல் காலம் நமக்­குள் இருந்த அறி­யாமை­யை­யும் தவ­றான புரி­தல்­க­ளை­யும் அகற்­றி­விட வாய்ப்­ப­ளித்­த­தைக் குறிப்­ப­தா­கக் கூறி­னார், ஜெயா ராதா­கி­ருஷ்­ணன்.

சோகத்­தை­யும் சவால்­க­ளை­யும் வென்று நம்­பிக்கை ஏற்­ப­டுத்­தும் இசையை, பாடல்­வ­ரி­க­ளுக்­கேற்ப அமைத்­த­னர், கர்­நா­டக இசை பாட­கர் சுஷ்மா சோமா மற்­றும் அவ­ரு­டைய நண்­பர் திரு ஆதித்யா பிரகாஷ்.

உணர்­வு­க­ளைத் தொடும் வண்­ணத்­தில் கர்­நா­டக இசை­யை­யும் நவீன இசை­யை­யும் ஒன்­றி­ணைத்து இரு­வ­ரும் இசை அமைக்க முயன்று உள்­ள­தா­கக் கூறி­னார் சுஷ்மா சோமா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!