சிங்கப்பூரில் கல்யாணமாலையின் பட்டிமன்றம்

நகைச்­சு­வை­யான கருத்­துக்­க­ளு­டன் அரங்­கம் நிறைந்த பார்­வை­யா­ளர்­களை இம்­மா­தம் 15ஆம் தேதி­யன்று கல்­யா­ண­மாலை பட்டி­மன்­றக் குழு மகிழ்­வித்­தது.

கல்­யா­ண­மா­லை­ நிகழ்ச்சியின் பட்­டி­மன்ற நட்­சத்­தி­ரங்­க­ளான சால­மன் பாப்­பையா, பட்­டி­மன்ற ராஜா, பாரதி பாஸ்­கர் ஆகி­யோ­ரு­டன் நான்கு உள்­ளூர் பேச்­சா­ளர்­கள் கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று மேடை­யே­றிப் பேசி­னர். ‘8 பாயிண்ட் என்டர்டெய்ன்மண்ட்’ தமிழ் பட்­டி­மன்ற கலைக்­க­ழ­கத்­து­டன் இணைந்து படைத்த கல்­யா­ண­மாலை பட்­டி­மன்­றம், ‘கார்­னி­வல்’ திரை­ய­ரங்­கில் இடம்­பெற்­றது.

வெளி­நா­டு­களில் வாழும் இந்­தி­யர்­க­ளுக்­குப் பெரிய சவா­லாக இருப்­பது பிள்­ளை­களை வளர்ப்­பதா, பெற்­றோ­ரைப் பரா­ம­ரிப்­பதா எனப் பேச்­சா­ளர்­கள் தங்கள் வாதங்களை முன்வைத்­த­னர்.

மின்­னி­லக்­க­ம­ய­மா­கி­யுள்ள காலத்­தில், உற­வி­னர்­க­ளின்றி நவீன நக­ரத்­தில் பிள்­ளை­களை வளர்ப்­பதே பெரிய சவா­லென வாதிட்­ட­னர், திரு­மதி பாரதி பாஸ்­கர், திரு­மதி அகிலா இராமு மற்­றும் முனை­வர் மன்னை ராஜ­கோபாலன். பெற்­றோ­ரின் காலம் நமது வாழ்­நா­ளில் என்றோ ஒரு கட்­டத்­தில் முற்று பெற்­று­வி­டும், பிள்­ளை­களின் காலமோ நமது வாழ்­நாள் முழுக்க நீடிக்­கும் என்றார் திரு­மதி பாரதி பாஸ்­கர்.

மறு­பு­றத்­தில், பிள்­ளை­கள் குறித்த எதிர்­பார்ப்­பு­க­ளைப் பெற்­றோர் குறைத்­துக்­கொள்­ளா­ததே பிள்ளை வளர்ப்­பில் குறுக்­கி­டு­வ­தாக வாதிட்ட எதி­ர­ணி­யி­னர், தாய­கத்­தில் விட்­டு­வந்த பெற்­றோரைப் பரா­ம­ரிப்­பதே ஆகக் கடி­ன­மாக இருப்­பதை நோய்ப்­ப­ர­வல் காலம் உணர்த்­தி­ய­தாக முன்­வைத்­த­னர். திரு ராஜா­வின் தலை­மை­யில், திரு­மதி ஸ்வர்­ண­லதா ஆவு­டை­யப்­பன், திரு யூசுப் ரஜித் ஆகி­யோர் அடங்­கிய எதி­ரணி, பெற்­றோ­ரைச் சரி­வர பார்த்­துக்­கொள்­ளா­தது கால­மெல்­லாம் மனதை உறுத்­தக்­கூ­டி­யது என்று வலி­யு­றுத்­தி­னர்.

பிள்­ளை­களை வளர்க்க பள்ளி­களும் சமூ­க­மும் இருக்­கும் வேளை­யில், பெற்­றோ­ரைப் பரா­ம­ரிக்க நாம் மட்­டுமே உள்­ளோம் என்று கூறி மக்­க­ளைக் கவர்ந்­தார் திரு ராஜா.

இரு­த­ரப்பு வாதங்­க­ளை­யும் கேட்ட நடு­வர் திரு சால­மன் பாப்­பையா, பெற்­றோர் இல்­லா­ம­லும் வாழ்ந்­து­வி­டு­வேன் என உறு­தி­யுடன் இருக்­கும் இக்­கா­லத்­துப் பிள்­ளை­க­ளைக் காட்­டி­லும், பிள்ளை­க­ளின் பரா­ம­ரிப்பு இன்றி நிற்க முடி­யாது என்ற நிலை­மை­யில் உள்ள பெற்­றோ­ரைப் பரா­மரிப்­பதே பெரிய சவா­லாக இருக்­கிறது எனத் தீர்ப்பு வழங்­கி­னார்.

நோய்ப்­ப­ர­வல் காலத்­துக்­குப் பின்­னர் கல்­யா­ண­மாலை ஏற்­பாடு செய்­துள்ள முதல் வெளி­நாட்டு நிகழ்­வான இப்­பட்­டி­மன்­றத்­தில், கல்­யா­ண­மாலை தனது 23ஆவது ஆண்டு தொடக்கத்தையும் கொண்­டாடி­யது. 2002க்குப் பின்­னர் இரண்­டா­வது முறை­யாக சிங்­கப்­பூர் வந்­தி­ருந்­தது கல்­யா­ண­மாலை குழு. தனது அடுத்த வெளி­நாட்டு நிகழ்ச்சி, ­இங்­கி­லாந்­தில் நடை­பெ­ற­வுள்­ள­தாக அது தெரி­வித்­தது.

vishnuv@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!