இணைய சூதாட்டத்தில் பணம் ஈட்டி வீட்டுக் கடன் கட்டிய ஆடவர்

வேலை­யில்­லாத ஆட­வர் ஒரு­வர் இணைய சூதாட்­டக் குழு ஒன்­றில் இணைந்­தார். முத­லில் சட்­ட­வி­ரோ­த­மாக ‘4டி’, ‘டோட்டோ’ பந்­த­யப் பிடிப்பு எனச் சிறிய அள­வில் தொடங்­கிய அவர் படிப்­ப­டி­யாக மற்­ற­வற்­றி­லும் ஈடு­பட்டு இன்று தனக்­குக்­கீழ் பலரை நிர்­வ­கிக்­கும் நிலையை அடைந்­துள்­ளார்.

இதன் மூலம் ஈட்­டிய தொகை­யைக் கொண்டு வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீட்­டுக் கட­னுக்­காக மத்­திய சேம­நி­திப் பணம் என்ற போர்­வை­யில் அவர் பணம் செலுத்­தி­னார்.

டான் மிங் ரென் கீகன் எனும் 32 வயது ஆட­வர், 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்­தில் வாட்­டர்வே பாயிண்­டில் கைது செய்­யப்­பட்­டார்.

சட்­ட­வி­ரோத சூதாட்­டக் கும்­ப­லைப் பிடிக்க அப்­போது காவல்­துறை­ மேற்­கொண்ட சோதனை நட­வ­டிக்­கை­யில் அவ­ரு­டன் சேர்த்து மொத்­தம் 36 பேர் சிக்­கி­னர்.

சூதாட்­டம், ஊழல், போதைப்­பொ­ருள் கடத்­தல், தீவிர குற்­றங்­கள் எனப் பல்­வேறு பிரி­வு­களில் தன்­மீது சுமத்­தப்­பட்ட ஐந்து குற்­றச்­சாட்­டு­களை நேற்று அவர் ஒப்­புக்­கொண்­டார்.

மேலும் எட்­டுக் குற்­றச்­சாட்­டு­கள் தண்­டனை விதிக்­கும்­போது கருத்­தில் கொள்­ளப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

டான் 2016ஆம் ஆண்டு வேலை­யி­லி­ருந்து வில­கி­னார். பின்­னர் 2017ல் சீ செங் என்­ப­வ­ரு­டன் சேர்ந்து பந்­த­யப் பிடிப்­பில் ஈடு­பட்­டார்.

சட்­ட­வி­ரோ­த­மான பந்­த­யப் பிடிப்­புக்கு சீ செங்­கின் முக­வர் கணக்­கைப் பயன்­ப­டுத்தி வேலை­செய்த டானுக்கு தொடக்­கத்­தில் 10 விழுக்­காடு தர­குப் பணம் தரப்­பட்­டது.

கூடு­த­லாக, அவர் மூலம் பந்­த­யம் கட்­டி­ய­வர் வெற்றி பெற்­றால் அவர் வென்ற தொகை­யில் ஐந்து விழுக்­கா­டும் டானுக்கு வழங்­கப்­பட்­டது. பிறகு ஒரு கட்­டத்­தில் தர­குப் பணம் மட்­டும் பெற்­றுக்­கொள்­வ­தில் இருந்து உயர்ந்து லாப, நட்­டத்­தில் பங்­கெ­டுக்­கும் நிலையை அடைந்­தார் டான்.

அவ­ருக்­குக்­கீழ் நான்கு முக­வர்­கள் வேலை­பார்த்­த­னர். ஜோன­தன் லீ ஜுன் யிங் என்­ப­வ­ருக்­குப் பயிற்சி அளித்து வாரா­வா­ரம் பந்­த­யப் பணத்தை விநியோ­கம் செய்­யும் பொறுப்­பை­யும் கொடுத்­தார் டான்.

லீ மூலம் 2019 ஜூலை­யில் 18 நாள்­களில் மொத்­தம் $27,614.10 பந்­த­யப் பணம் திரட்­டப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. அதே கால­கட்­டத்­தில் டானி­டம் வேலை­பார்த்த மற்­றொரு முக­வர் $26,391.02 ஈட்­டி­னார்.

மத்­திய சேம நிதி தொடர்­பான குற்­றச்­செ­யல்­கள்

சட்­ட­வி­ரோ­த­மாக ஈட்­டிய பணத்­தைக் கொண்டு மத்­திய சேம நிதிக்­குப் பணம் செலுத்­தி­ய­தை­யும் டான் ஒப்­புக்­கொண்­டார்.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு ஒன்றை வாங்க விரும்­பிய அவர், நிலை­யான வரு­மா­னம் இருப்­ப­தா­கக் காட்­டும் பொருட்டு சில நிறு­வ­னங்­கள் மூலம் அவற்­றின் ஊழி­யர் என்ற முறை­யில் மசே­நி­திக்­குப் பணம் செலுத்­தி­னார்.

அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர், டானுக்கு 17 முதல் 20 மாதச் சிறைத்­தண்­ட­னை­யு­டன் $60,000 அப­ரா­தம் விதிக்­கக் கோரி­னார்.

ஆனால் தனது எட்டு மாத இளைய மகளை உற­வி­னர் இல்­லங்­க­ளுக்கு அழைத்­துச்­சென்று காட்ட விரும்­பு­வ­தா­க­வும் சீனப் புத்­தாண்­டுக்­குப் பிறகு தான் சிறைத்­தண்­ட­னையை நிறை­வேற்ற அனு­ம­திக்­கும்­ப­டி­யும் டான் கோரி­யுள்­ளார்.

இத­னை­ய­டுத்து அடுத்த மாதம் 25ஆம் தேதி டானுக்கு தண்­டனை விதிக்­கப்­படும் என்று கூறிய நீதி­பதி வழக்­க­மாக இவ்­வாறு செய்­யப்­ப­டு­வ­தில்லை என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!