சமூகத்தில் உதவிக்கு முதலில் விரைவோர்க்கான விருதுகள்

அனுஷா செல்­வ­மணி

நெருக்­க­டிச் சூழ­லில் சிக்­கிக்­கொண்­டோ­ருக்கு உத­விக்கரம் நீட்­டி­ய­வர்­களை அங்­கீ­க­ரிக்­கும் வித­மாக, சமூகத்தில் உதவிக்கு முதலில் விரைவோர்க்கான விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

விருது பெற்­ற­வர்­களில் ஒரு­வர் 48 வயது கேரி ஹாரிஸ். இவர் நேற்று மூன்று விரு­து­களைப் பெற்­றுக்­கொண்­டார்.

ராயல் கிங்ஸ் ஆலோ­சனை நிறு­வ­னத்­தின் இயக்­கு­ந­ரான கேரி, மூன்று வெவ்­வேறு விபத்து­க­ளின்­போது , பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு உதவி வழங்­கி­னார்.

கேரி­யு­டன், சுல்­தான் பள்­ளி­வா­ச­லைச் சேர்ந்த மேலும் ஏழு தொண்­டூ­ழி­யர்­க­ளுக்­கும் விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

ஆறு நாள்­க­ளுக்கு முன்பு, அராப் ஸ்தி­ரீட்­டில் அமைந்­துள்ள ஸம் ஸம் உண­வ­கத்­திற்கு அரு­கில் இர­வு­நே­ரத்­தில் அடி­பட்­டுக் கிடந்த ஒரு பெண்ணைப் பார்த்தார் கேரி.­

அப்பெண்ணுக்கு உதவி அளித்ததுடன், உட­ன­டி­யாக மருத்­துவ வாக­னத்­தைத் தொடர்பு­கொண்­டார்.

முன்­ன­தாக, கடந்த மாதம் சிலேத்­தார் விரை­வுச்­சா­லை­யில், மண்­டாய் சாலைக்கு அரு­கில் ஏற்­பட்ட விபத்­தில் சிக்கி உயி­ருக்­குப் போரா­டிக்­கொண்­டி­ருந்த மோட்­டார் சைக்­கி­ளோட்­டியை அணுகி, சம்­பவ இடத்­துக்கு அவ­சர மருத்­துவ வாக­னம் வரும்­வரை அந்த இளை­ய­ரைக் கண்­கா­ணித்­தார் கேரி.

சென்ற ஆண்டு நவம்­பர் மாதம், டிக்­சன் சாலைக்­கும் கிளைவ் சாலைக்­கும் இடை­யிலான சாலைச் சந்­திப்­பில் திறன்­பே­சியைப் பயன்­ப­டுத்­தி­ய­வாறே சாலை­யைக் கடந்­த­போது வாக­னம் மோதி காயமுற்ற இல்­லப் பணிப்­பெண்­ணுக்கு கேரி உத­வினார்.

கால்களிலும் கைகளிலும் பலத்த காயம் ஏற்­பட்ட அந்­தப் பெண்­ணுக்கு மன ஆறு­தல் அளித்து, சாலை­யில் மக்­க­ளின் நட­மாட்­டத்­தை­யும் இவர் கட்­டுப்­படுத்­தி­யதாகக் கூறப்பட்டது.

சமூகத்தில் உதவிக்கு முதலில் விரைவோர்க்கான விரு­து­களை வழங்கும் விழாவிற்கு சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை ஏற்பாடு செய்திருந்தது.

­இவ்விழா, நேற்­றுப் பிற்­ப­கல் குவீன்ஸ்­ட­வு­னில் அமைந்­துள்ள சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் முதல் பிரி­வில் இடம்­பெற்­றது.

அப்­பி­ரி­வின் தள­பதி கேரி உள்ளிட்ட தொண்டூழியர்களுக்கு விரு­து­களை வழங்­கி­னார்.

“ஒரு­வர் நெருக்­க­டி­யான சூழ்­நி­லை­யில் துன்­பப்­ப­டும்­போது, தொலை­வில் நின்று வேடிக்கை பார்ப்­ப­தி­லும் புகைப்­ப­டம் எடுத்து சமூக ஊட­கங்­களில் பதி­வேற்­றம் செய்­வ­தி­லும் கவ­னம் செலுத்­து­வோரைக் காண வேதனையளிக்கிறது.

“இதற்­குப் பதில், முடிந்­த­வரை பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு உத­வு­வதே சிறந்­த பண்பு.

“மக்­க­ளிடையே விழிப்­பு­ணர்வு அதி­க­ரிக்­க­ இது­போன்ற விரு­து­கள் உதவும்,” என்றார் கேரி.

நேற்று விருது பெற்­ற­வர்­களில் ஆக இளை­ய­வர், பல­து­றைத் தொழிற்­கல்­லூரி மாண­வ­ரான 18 வயது முக­மது அசீம் முக­மது அலி.

பொது­மக்­க­ளுக்கு உதவ முன்­வ­ரு­வ­தில் இளைய தலை­மு­றை­யி­ன­ருக்கு முன்­மா­தி­ரி­யாக விளங்­கு­வ­தாக இவர் பாராட்­டப்­பட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!