ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லீ பங்கேற்பு

இந்­தோ­னீ­சி­யா­வில் அமைந்­தி­ருக்­கும் லாபு­வான் பாஜோ நக­ரில் இன்­றும் நாளை­யும் நடை­பெ­றும் 42வது ஆசி­யான் உச்­ச­நிலை மாநாட்­டில் பிர­த­மர் லீ சியன் லூங் தலை­மை­யி­லான பேரா­ளர் குழு கலந்­து­கொள்­கிறது.

இவ்­வாண்­டின் ஆசி­யான் தலை­மைத்­து­வப் பொறுப்பை ஏற்­றி­ருக்­கும் இந்­தோ­னீ­சியா ஏற்­பாடு செய்­யும் இரு உயர்­மட்ட உச்­ச­நிலை மாநாட்­டில் இது முத­லா­வது.

‘ஆசி­யான் முக்­கி­யம்: வளர்ச்சி­யின் மையப்­ப­குதி’ என்ற கருப்­பொ­ரு­ளில் அமை­யும் இந்­தோ­னீ­சி­யா­வின் ஆசி­யான் தலை­மைத்­து­வம், ஆக்­க­க­ர­மான முன்­னோக்­குப் பார்­வை கொண்ட செயல்­திட்­டத்­தைப் பறை­சாற்­று­கிறது என்று பிர­த­மர் அலு­வ­ல­கம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

குறிப்­பாக ஆசி­யா­னின் ஒற்­று­மை­யை­யும் வளர்ச்­சி­யை­யும் உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் பொரு­ளி­யல் பங்காளித்­து­வத்­தி­லும் சமூக வளர்ச்சி முயற்­சி­க­ளி­லும் இந்த செயல்­திட்­டம் முக்­கி­யம் என்று அந்த அறிக்கை மேலும் கூறி­யது.

ஆசி­யா­னின் வளர்ச்­சி­யைப் பரி­சீ­லித்து; மின்­னி­லக்க, பசுமைப் பொருளியலை வலுப்­படுத்­தும் வழி­மு­றை­கள் குறித்த கலந்­து­ரை­யா­டல்­களை ஆசி­யான் தலை­வர்­கள் மேற்­கொள்­வார்­கள்.

திறந்த, அனை­வ­ரை­யும் அர­வ­ணைக்­கும், நிலைத்­தன்­மை­மிக்க வட்­டாரக் கட்­ட­மைப்­பைத் தொடர்ந்து நிலை­நாட்­டும் நோக்­கத்­தில் ஆசி­யான் தலை­வர்­கள் புவி­சார் அர­சி­யல் நில­வ­ரங்­களைப் பற்றி பேசுவார்­கள் என்று பிர­த­மர் அலு­வ­ல­கம் மேலும் சொன்­னது.

அனைத்­து­லக மற்­றும் ஆசி­யான் வட்­டார முன்­னேற்­றங்­கள் உட்­பட மியன்­மார் நாட்டு நில­வ­ர­மும் கலந்­து­ரை­யா­டல்­களில் இடம்­பெ­றும் என்று எதிர்­பார்ப்­ப­தாக பிர­த­மர் அலு­வ­ல­கம் கூறி­யது.

தடுப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­குப் பதி­லாக பேச்­சு­வார்த்தை மூலம் மியன்­மார் சர்ச்­சையை சமா­ளிக்­கும்­படி ஆசி­யான் தலை­வர்­க­ளுக்கு வலி­யு­றுத்­தி­னார் இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ.

“ஆசி­யான் வெளிப்படையாக, எவ­ரு­ட­னும் எந்த நாட்­டு­ட­னும் ஒத்­து­ழைக்­க­வேண்­டும் என்று நாம் விரும்­பு­வ­தால், ஆசி­யா­ன் நாடுகளுக்கிடையிலான பிரச்­சி­னை­க­ளுக்கு பேச்­சு­வார்த்­தை கொள்­கை­யின்­படி தீர்வு காண­வேண்­டும். இது மிக முக்­கி­யம், குறிப்­பாக மியன்­மாரைப் பொருத்­த­வ­ரை­யில்,” என்று ஞாயிற்­று­கிழமை (மே 7) லாபு­வான் பாஜோ விமா­ன­ நி­லை­யத்­தில் தரை­யி­றங்­கி­ய­போது செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார் திரு விடோடோ.

இதற்­கி­டையே மியன்­மா­ரில் மனி­த­நேய உதவி வழங்­கும் ஆசி­யான் அதி­கா­ரி­க­ள் சென்ற வாக­னங்­கள் ஞாயிற்­றுக்­கி­ழமை தாக்­கப்­பட்­டன.

சிங்­கப்­பூர் தூத­ர­கத்­தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அப்போது அந்த வாகனங்களில் இருந்ததாகவும் தற்­போது அவர்­கள் பாது­காப்­பாக இருப்பதாகவும் வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­தது.

இந்தத் தாக்­கு­தல் மியன்­மாரின் கிழக்குப் பகு­தி­யில் அமைந்­துள்ள சான் மாநி­லத்­தில் நிகழ்ந்­தது என்­றும் இவ்­விரு சிங்­கப்­பூ­ரர்­கள் யங்­கோன் நக­ருக்கு திரும்­பி­யுள்­ள­தா­க­வும் அமைச்சு மேலும் தெரி­வித்­தது. இது­வரை தாக்­கு­த­லுக்கு யாரும் பொறுப்பு ஏற்­க­வில்லை.

தாக்­கு­த­லுக்கு சிங்­கப்­பூர் கண்­ட­னம் தெரி­விக்­கிறது என்­றும் தேவை­யுள்­ள­வர்­க­ளுக்கு உத­வும் மனி­த­நேயத் தூத­ரகப் பணி­யா­ளர்­க­ளின் பாது­காப்பை நிலை­நாட்­டு­வது முக்­கி­யம் என்­றும் சிங்கப்பூர் வெளி­யு­றவு அமைச்சின் பேச்­சா­ளர் சொன்­னார்.

இச்­சம்­ப­வத்­தைக் குறிப்­பிட்டு மே 8ஆம் தேதி நிகழ்ந்த மற்­றொரு செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் அதி­பர் விடோ­டோ­வும் கண்­ட­னம் தெரி­வித்­தார்.

பிர­த­மர் லீயு­டன் திருமதி லீ, வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ரு­‌ஷ்­ணன், பிர­த­மர் அலு­வ­ல­கம், வெளி­யு­றவு அமைச்சு ஆகியவற்றின் அதி­கா­ரி­கள் ஆசியான் உச்­ச­நிலை மாநாட்­டில் கலந்­து­கொள்­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!