கூடுதலான வெளிநாட்டு ஊழியரைப் பணியமர்த்த பள்ளிப் பேருந்து நிறுவனங்களுக்கு அனுமதி

1 mins read
a24c5072-81e4-474d-9749-f2cf946a0124
அடுத்த ஈராண்டுகளுக்குக் கூடுதலான வெளிநாட்டு ஊழியரைப் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களாகப் பணியமர்த்த ஆறு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பள்ளிப் பேருந்துச் சேவை வழங்கும் நிறுவனங்கள் ஓட்டுநர் பற்றாக்குறையைச் சமாளிக்க, கூடுதலான வெளிநாட்டு ஊழியர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அமைச்சு ஜூன் மாதம் அறிவித்திருந்தது.

அதன் பிறகு, அத்தகைய ஆறு நிறுவனங்களுக்கு அதன் தொடர்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிப் பேருந்துச் சேவைக்கு நிறுவனங்கள் எந்த அளவு பங்களிக்கின்றன, உள்ளூர் ஓட்டுநர்களைப் பணியமர்த்துவதில் அவை எத்தகைய கடப்பாட்டைக் கொண்டுள்ளன என்ற அம்சங்களின் அடிப்படையில் அவை மதிப்பீடு செய்யப்பட்டதாகக் கல்வி அமைச்சு தெரிவித்தது.

பள்ளிப் பேருந்துச் சேவை வழங்கும் நிறுவனங்கள், கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் குறைந்தது இரண்டு பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்க வேண்டும்.

சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசிகளையும் ஓட்டுநர் பணிக்கு அமர்த்துவதன் தொடர்பில் அவை மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சு கூறியது.

கூடுதல் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்தும் அனுமதி வழங்கப்பட்ட ஆறு நிறுவனங்களின் பெயர்களை அது வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்