சிறுநீரக நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் கூடுதல் உதவி

பலமுறை தனது உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணியபோதெல்லாம், கைக்குழந்தையாக இருந்த மகளைப் பார்த்தவுடன், தனது சிந்தை தெளிவடைந்ததாகக் கூறினார் திருவாட்டி ஃபுளோரன்ஸ் அமெர்டு அந்தோணி ஜோசஃப். 38 வயதிலேயே சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதை ஏற்றுகொள்ள முடியாமல் அவர் தவித்தார்.

திருமணமாகிப் பத்து ஆண்டுகள் கழித்து திருவாட்டி ஃபுளோரன்சுக்கு ஒரு மகள் பிறந்தார்.

ஆனால், மகள் பிறந்த மகிழ்ச்சியில் அவரால் திளைக்க முடியாமல் போனது. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகிய பாதிப்புகளோடு அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாகவும் மருத்துவர் கூறிய போது, ஃபுளோரன்சின் வாழ்க்கை இருண்டது.

தற்போது 23 வயதாகும் மகள் பிரிசில்லா சாந்தினி தான் எனக்கு எல்லாம்,” என்று உணர்ச்சிபொங்க கூறினார் ஃபுளோரன்ஸ்.

தற்போது 61 வயதாகும் ஃபுளோரன்ஸ், கடந்த 22 ஆண்டுகளாக ‘டயாலிசிஸ்’ என்னும் ரத்த சுத்திகரிப்பு அமர்வுக்கு வாரத்தில் மூன்று நாள்கள் சென்றுவருகிறார்.

வேலைக்குச் செல்லாத அவருக்கு, நிதியுதவி வழங்குவது பாதுகாப்பு துறையில் பணியாற்றும் அவருடைய கணவர் மட்டுமே.

அவரின் ஒரே மகள் இன்னும் படித்து கொண்டிருக்கிறார். அரசாங்க உதவி கைகொடுத்து வந்தாலும், நோய் தீரும் வரையில் ஃபுளோரன்ஸ் போன்ற நோயாளிகளுக்குப் போராட்டம் தான்.

டயாலிசிஸ் செல்லும் நோயாளிகள் வாரத்திற்கு மூன்று முறை, ஒவ்வொரு முறையும் நான்கு மணி நேரம் ஒதுக்க வேண்டும். அதற்கு அவர்கள் மாதம் $2,000 செலவு செய்ய வேண்டும்.

அவரைப் போன்ற நோயாளிகளின் மருத்துவச் செலவுகளுக்கு உதவி செய்யும் வகையில் சிறுநீரக டயாலிசிஸ் அறநிறுவனம், சனிக்கிழமை முதல்முறையாக $300,000க்கும் மேற்பட்ட தொகையைத் தனது நன்கொடை நிகழ்வு மூலம் திரட்டியது.

அந்தத் தொகை, உதவி தேவைப்படும் சிறுநீரக நோயாளிகளுக்கு கைகொடுக்கும்.

ஃபுட்சால் எனப்படும் காற்பந்துப் போட்டி மூலம் அத்தொகை திரட்டப்பட்டது.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆகியவற்றுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

ஃபுளோரன்ஸ் போன்ற இதர நோயாளிகளும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

63 வயதாகும் செல்வராஜா மாயாண்டி, கடந்த ஓராண்டாக ரத்த சுத்திகரிப்புக்குச் சென்று வருகிறார்.

இதய சிகிச்சை, ரத்தத்தில்  அதிக அளவில் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவற்றால் பாதிப்படைந்துள்ள அவர், “உடல்நிலை மோசமாக இருந்ததால் என்னால் கடந்த பத்தாண்டுகளாக வேலைக்குச் செல்ல முடியவில்லை.

“என் மனைவி சில காலம் வேலை பார்த்தார். ஆனால் அவரும் அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டார். எனக்கு இருக்கும் ஒரே மகனுக்கு 20 வயது. அவன் அடுத்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் படிக்கப் போகிறான்,” என்று கூறினார்.

“எங்களுக்கு செலவுகள் அதிகரிக்கின்றன. ஆனால் பணம் குறைந்துகொண்டே போகிறது. இந்த நிதியுதவி எனக்கு கைகொடுக்கும்.” என்று நம்பிக்கையுடன் கூறினார் செல்வராஜா மாயாண்டி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!