மண்டாய் உணவு மையத்தில் முழுஉரிமை கொண்ட தொழில் இடங்கள்

மண்டாயில் 115 தொகுதிகள் கொண்ட 10 மாடி புதிய உணவுத் தொழிற்சாலை

முழு உரிமையுடன் (freehold) 115 தொகுதிகள் கொண்ட 10 மாடி புதிய உணவுத் தொழிற்சாலை எண் 21 மண்டாய் எஸ்டேட்டில் அமையவுள்ளது.

‘ஃபுட் விஷன்@மண்டாய்’ எனும் அத்தொழிற்சாலையில், ஒரே இடத்தில் உணவைச் சமைத்து, பதப்படுத்தி, பொட்டலமிட்டு, விநியோகிக்கும் வசதி இருக்கும்.

பெரும்பாலான இத்தகைய வணிகப் பயன்பாட்டுக் கட்டடங்கள், இடங்களுக்கு 30 அல்லது 60 ஆண்டுகால குத்தகையையே வழங்குகின்றன. ஆனால், ‘ஃபுட் விஷன்’னில் இத்தகைய குத்தகையின்றி முழு உரிமையுடன் இடம் வாங்கலாம்.

கட்டடத்தின் வசதிகள்

கட்டடத்தின் ஒவ்வொரு மாடியிலும் அனைத்துத் தொகுதிகளையும் சரிவுப்பாதைவழி வாகனங்கள் சென்றடையலாம். வாசற்படியிலேயே பொருள்களை ஏற்றி இறக்கலாம்.

இக்கட்டடம் தூண்களின்றி கட்டப்பட்டிருப்பதால் தங்கள் தேவைகளுக்கேற்ப வணிகங்கள் இடத்தை வடிவமைக்கலாம். கூடுதல் இடம் தேவைப்பட்டால் அருகிலுள்ள தொகுதிகளையும் வாங்கிக்கொள்ளலாம்.

ஒவ்வொரு தொகுதிக்கும் தனியாகக் கதவு, சுருள்கதவு, சமையலறை புகைக்கூண்டு ஆகியவை இருக்கும். சமையலறை, குளிர் அறைக்கு தாழ்தளம் வழங்கப்படும்.

சிங்கப்பூரின் மற்ற பகுதிகளுடன் இணைப்பு

சிலேத்தார், புக்கிட் தீமா, கிராஞ்சி விரைவுச்சாலைகள் மூலம் ஃபுட் விஷனுக்கும் மற்ற இடங்களுக்கும் இடையே போக்குவரத்து வசதி உள்ளது. படம்: மண்டாய் பேட்டை மேம்பாட்டு நிறுவனம்
பல வசதிகளுக்கு அருகே அமையவுள்ளது ‘ஃபுட் விஷன்’. படம்: மண்டாய் பேட்டை மேம்பாட்டு நிறுவனம்

சிலேத்தார், புக்கிட் தீமா, கிராஞ்சி விரைவுச்சாலைகள் ‘ஃபுட் விஷனை’ மற்ற இடங்களுடன் இணைக்கின்றன.

மேலும், ‘ஃபுட் விஷன்’னிலிருந்து உட்லண்ட்ஸ் வட்டார நிலையம், உட்லண்ட்ஸ் கடற்பாலம், எதிர்கால சுங்கை காடுட் பெருவிரைவு ரயில் முனையம் போன்ற இடங்களை விரைவில் சென்றடையலாம்.

உட்லண்ட்ஸ் கடற்பாலம்வழி ஊழியர்களையும் மூலப்பொருள்களையும் எளிதில் பெறலாம். படம்: மண்டாய் பேட்டை மேம்பாட்டு நிறுவனம்

உணவுத் தொழிற்பகுதியில் அமைதல்

விரைவாக வளர்ந்துவரும் வடக்கு வேளாண்-தொழில்நுட்ப உணவுத் தொழிற்பகுதி, சுங்காய் காடுட் சுற்றுப்புற வட்டாரத்தின் அருகே ‘ஃபுட் விஷன்’ அமைகிறது.  படம்: மண்டாய் பேட்டை மேம்பாட்டு நிறுவனம்

விரைவாக வளர்ந்துவரும் வடக்கு வேளாண்-தொழில்நுட்ப உணவுத் தொழிற்பகுதி (Northern Agri-Tech and Food Corridor), சுங்கை காடுட் சுற்றுப்புற வட்டாரத்தின் அருகே ‘ஃபுட் விஷன்’ அமைகிறது.

இதனால் உணவுத் தயாரிப்புத் தொழில்நுட்பங்கள், உயர்-தொழில்நுட்ப விவசாயம் போன்று உணவு வணிகத்திற்குத் தேவைப்படும் அனைத்தும் அருகிலேயே கிடைக்கும்.

எதிர்காலத்தில், ‘ஃபுட்இன்னோவேட்’ போன்ற அரசாங்க திட்டங்களின் உதவியோடு இவ்வட்டாரத்தில் உள்ள சிறிய, நடுத்தர வர்த்தகங்கள் இணைந்து உணவுப் பொருள்களைத் தயாரிக்கலாம்.

ஒவ்வொரு தொகுதியும் சராசரியாக 1,700 சதுர அடி பரப்பளவு கொண்டது. குறிப்பிட்ட தொகுதிகளுக்கு, குறுகிய காலத்திற்கு விலை ஒரு சதுர அடிக்கு $1,313 முதல் இருக்கும்.

தற்காலிக குடியிருப்பு அனுமதி (டிஓபி) 2025 நான்காம் காலாண்டில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஃபுட் விஷன்’ விற்பனைக் காட்சியகம் எண் 11 மண்டாய் எஸ்டேட் #12-01 எல்டிக்ஸ், சிங்கப்பூர் 729908 என்ற முகவரியில் உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம்.

தொகுதிகளை நேரில் காண விரும்புவோர் 8388 5577 என்ற எண்ணில் அழைக்கலாம். மேல்விவரங்களுக்கு foodvision.com.sg இணையத்தளத்தைக் காண்க.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!