தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குறைந்த வருமானக் குடும்பப் பிள்ளைகளை பாலர் பள்ளிக்கு வரச்செய்ய முயற்சி

2 mins read
fb5630cf-da32-43ec-a182-d84fe9b7da64
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தங்களின் பிள்ளைகள் சரிவர பாலர் பள்ளி வகுப்புகளுக்குச் செல்வதை உறுதிப்படுத்துவதில் குறைந்த வருமானக் குடும்பங்கள் சவால்களை எதிர்நோக்குகின்றன.

பிள்ளைகள் ஒழுங்கற்று நடந்துகொள்வது போன்ற சிக்கல்களை எதிர்கொள்வதால் அத்தகைய குடும்பங்கள் சிரமப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சினையைக் கையாள இவ்வாண்டு இரண்டாம் காலாண்டிலிருந்து அத்தகைய குடும்பங்களுக்கு பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு (இசிடிஏ) நிதியுதவி வழங்கும். மாணவர்களுக்கான கட்டணத்தை ஓரளவுக்கு மேல் உயராமல் பார்த்துக்கொள்ளும் நோக்கில் அரசாங்க நிதியுதவியுடன் செயல்படும் (ஆங்கர் ஆப்பரேட்டர்ஸ்) முக்கிய பாலர்பள்ளிகளுக்கு இது பொருந்தும். (From the article: )Anchor operators are pre-school operators that receive funding from the Government to keep their fees at a certain cap to ensure affordability.)

குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளைக் கூடுதலான பாலர் பள்ளி வகுப்புகளுக்கு வரச்செய்வது நிதியுதவி வழங்குவதன் நோக்கம்.

குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளைப் பாலர் பள்ளிக்குப் போகவைக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு கூறியிருந்தது. இம்மாதம் நடைபெற்ற அந்த அமைச்சுக்கான வரவுசெலவுத் திட்ட நாடாளுமன்ற விவாதத்தில் அத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் மாதந்தோறும் 72 விழுக்காட்டு நேரம் பாலர் பள்ளிக்குச் செல்வதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நடுத்தர வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளிடையே பதிவான 79 விழுக்காட்டைக் காட்டிலும் அந்த விகிதம் குறைவு என்று அவர் சுட்டினார்.

பிள்ளைகளை வகுப்புகளுக்கு வரவைக்கக் கூடுதல் ஊழியர்களை வேலைக்கு எடுக்கவும் செயல்பாட்டுச் செலவைச் சமாளிக்கவும் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு வழங்கவிருக்கும் நிதியுதவி கைகொடுக்கும்.

சிங்கப்பூரில் தற்போது அரசாங்க நிதியுதவியுடன் செயல்படும் ஐந்து பாலர் பள்ளிகள் செயல்படுகின்றன. அவை, பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் பாலர் பள்ளி, மை ஃபர்ஸ்ட் ஸ்கூல், எம்.வை வோர்ல்ட் பாலர் பள்ளி, ஸ்கூல்4கிட்ஸ், இ-பிரிட்ஜ் பாலர் பள்ளி ஆகியவையாகும்.

குறிப்புச் சொற்கள்