சிங்லைஃப் நிறுவனத்தை முழுமையாக வாங்க முன்வந்துள்ள ஜப்பானிய நிறுவனம்

ஜப்பானியக் காப்புறுதி நிறுவனமான சுமிடோமோ லைஃப் இன்ஷுரன்ஸ், சிங்லைஃப் எனும் உள்ளூர் காப்புறுதி நிறுவனத்தை முழுமையாக வாங்க முன்வந்துள்ளது. அது $4.6 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வட்டாரத்தின் மிகப் பெரிய காப்புறுதி ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது.

ஒப்பந்தத்தின்கீழ் சுமிடோமோ லைஃப், சிங்லைஃப் நிறுவனத்தில் டிபிஜியின் 35 விழுக்காட்டுப் பங்குகளை $1.6 பில்லியனுக்கு வாங்கும். சிறுபான்மை முதலீட்டாளர்களின் பங்குகளையும் அது வாங்கிக்கொள்ளும்.

இதனால் சிங்லைஃப் நிறுவனம் ஒசாகாவில் தளம் கொண்டுள்ள சுமிடோமோ லைஃப் நிறுவனத்தின்கீழ் முழுமையாக இயங்கும். தென்கிழக்காசியாவில் சுமிடோமோ லைஃப் நிறுவனம் கொண்டுள்ள உத்தியின் ஒரு பகுதி அது.

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் பரிவர்த்தனைகள் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்லைஃப் கூறியது. இருப்பினும், அதற்கு ஜப்பானிலும் சிங்கப்பூரிலும் ஒப்புதல் பெறப்படவேண்டும்.

முதன்முதலில் 2019ஆம் ஆண்டில் சிங்லைஃப் நிறுவனத்தில் முதலீடு செய்த சுமிடோமோ லைஃப், தனது தென்கிழக்காசிய உத்தியின் ஒரு முக்கியப் பகுதியாக சிங்கப்பூரைப் பார்க்கிறது. தனது அனைத்துலக வர்த்தகத்தின் வருமானத்தை இந்த ஒப்பந்தம் வலுப்படுத்தும் என்று அது எதிர்பார்ப்பதாகவும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

சிங்லைஃப் செயல்படும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அதற்குத் திட்டமில்லை என்பதால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!