கடமை, கண்ணியம் தவறாத தந்தை

தம் குடும்­பத்­துக்­காக புக்­கிட் பாஞ்­சாங் பத்­தாம் கல்­லில் திரு சுப்­பையா கம்­பத்து வீடு ஒன்­றைத் தாமே கட்­டி­னார். பிள்­ளை­க­ளுக்­குத் தண்­ணீர் எளி­தில் கிடைக்­க­வேண்­டும் என்­ப­தற்­காக வீட்­ட­ருகே 13 அடி ஆழத்­தில் கிணறு ஒன்­றை­யும் தோண்­டி­னார். கடமை­ உணர்­வு­மிக்க ஒரு தந்­தை­யாக இன்­றும் நடை­போ­டு­கி­றார் 100 வயது நிரம்­பிய திரு சுப்­பையா.

மனைவி கம­லத்­தைக் கரம்­பிடித்த 75ஆம் ஆண்டு நிறைவு விழா­வை­யும் தந்­தை­யர் தினத்­தை­யும் கொண்­டாட இவ­ரின் ஆறு பிள்­ளை­களும் நேற்று ஏற்­பாடு செய்­தி­ருந்­த­னர்.

தற்­போது ஜூரோங் வட்­டா­ரத்­தில் வசிக்­கும் திரு சுப்­பையா, மலே­சி­யா­வின் கோத்தா திங்கி பகு­தி­யில் 1922ஆம் ஆண்டு பிறந்­தார். ஏழு வய­தாக இருந்­த­போது தம் தாய்­தந்­தை­யரை இழந்­தார்.

எட்டு வயது முதல் வேலை செய்­யத் தொடங்­கிய திரு சுப்பையா, தீயப் பழக்­கங்­கள் ஏது­மில்­லாத ஓர் உழைப்­பா­ளி­யாக இருந்­த­தைக் கண்டு அவ­ரு­டன் ரப்­பர் தோட்­டத்­தில் வேலை பார்த்த கம­லத்­தின் அண்­ண­னும் தந்­தை­யும் இரு­வ­ருக்­கும் மண­மு­டிக்க முடிவு செய்­த­னர்.

"பொறுப்­பான தந்­தை­யாக இவர் இருப்­பார் என்ற நம்­பிக்கை அப்­போதே எனக்கு இருந்­தது," என்­றார் திரு­மதி கம­லம், 90.

தனக்­கென எந்த ஒரு வீண் செல­வை­யும் செய்­யா­மல் குடும்­பத்­திற்­கா­கக் கடு­மை­யாக உழைத்த சிக்­க­ன­வாதி தம் தந்தை என்று அவ­ரின் மூன்­றா­வது பிள்ளை திரு பால­கி­ருஷ்­ணன், 64, தெரி­வித்­தார்.

"பிள்­ளை­க­ளின் தேவை­களை அறிந்­த­வர். பிறந்­த­நாள், தீபா­வளி போன்ற பண்­டிகை காலங்­களில் புத்­தாடை, பல­கா­ரம், பட்­டாசு போன்­ற­வற்­றுக்­காக செலவு செய்து எங்­களை மகிழ்ச்­சிப்­படுத்து­வார்," என்று 'எஸ்டி என்­ஜி­னி­ய­ரிங்' நிறு­வ­னத்­தின் துணைத் தலை­வ­ரா­கப் பணி­யாற்­றும் பால­கி­ருஷ்­ணன் கூறி­னார்.

வீண் செலவு கூடாது, பிறர்­மீது பொறாமை கூடாது போன்ற கொள்­கை­க­ளைத் தம் தந்தை தங்­க­ளுக்கு அடிக்­கடி போதித்­த­தாக திரு சுப்­பை­யா­வின் மூத்த பிள்ளை திரு­மதி வள்­ளி­யம்மா, 69, தெரி­வித்­தார்.

அண்­டை­வீட்­டில் வசித்த திரு சுப்­பை­யா­வை­யும் அவர் மனை­வி­யை­யும் 'பெரி­யப்பா, பெரி­யம்மா' எனத் தாமும் தம் அக்­கா­வும் அழைப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார் வசந்தி சொக்­க­லிங்­கம், 61.

"என் தந்­தையை அவர் நல்­வழிப்­ப­டுத்­தி­ய­து­டன் முக்­கி­ய­மான முடி­வு­களை எடுப்­ப­தற்கு எங்­கள் குடும்­பத்­திற்கு மற்­று­மொரு தந்­தை­யாக இருந்­தார் சுப்­பையா பெரி­யப்பா," என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!