அமெரிக்காவிலும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

நான்குமுறை இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) வெற்றியாளரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அமெரிக்காவிலும் ஒரு கிரிக்கெட் அணியின் உரிமையை வாங்கியுள்ளது.

அமெரிக்காவில் ‘மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி)’ எனும் போட்டித் தொடர் இடம்பெறவுள்ளது. அதில் பங்கேற்கும் டெக்சஸ் அணியின் உரிமையை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளதாக இன்று சனிக்கிழமை (2023 மார்ச் 18) அறிவிக்கப்பட்டது.

டெக்சஸ் அணிக்காக உள்ளூர் முதலீட்டாளர் ஒருவருடன் சென்னை அணி கைகோத்துள்ளதாக ‘ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ’ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க டி20 லீக் போட்டிகளில் பங்கேற்கும் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் சென்னை அணியினுடையதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்எல்சி தொடரில் மொத்தம் ஆறு அணிகள் களமிறங்கவுள்ள அணியில், அவற்றுள் நான்கிற்கு ஐபிஎல் அணிகளே உரிமையாளர்கள்.
லாஸ் ஏஞ்சலிஸ் அணி உரிமையை கோல்கத்தா நைட் ரைடர்சும் நியூயார்க் அணி உரிமையை மும்பை இந்தியன்சும் வாங்கியுள்ளன. அதுபோல, சியாட்டல் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் வசமாகவுள்ளது.

வாஷிங்டன் டிசியும் சான் ஃபிரான்சிஸ்கோவும் எம்எல்சி போட்டியில் களமிறங்கும் மற்ற இரண்டு அணிகள்.

எம்எல்சி போட்டித் தொடர் வரும் ஜூலை 13ஆம் தேதி தொடங்கவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!