2019 உலகக் கிண்ணத் தொடரில் விளையாட டோனி விருப்பம்

நடப்பு டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியபோதும் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் வரையிலும் விளையாட விரும்புவதாக சூசகமாகத் தெரிவித்து இருக்கிறார் இந்திய அணித் தலைவர் டோனி. அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்றபிறகு செய்தியாளர்களை டோனி சந்தித்தார். அப்போது ஆஸ்திரேலிய செய்தியாளர் ஒருவர், "எம் எஸ், எல்லாமே சாதித்துவிட்டீர்கள். இனியும் தொடர்ந்து விளையாடுவீர்களா?" என்று அவரிடம் கேட்டார்.

இதை எதிர்பார்த்திருந்த டோனி அப்போது செய்த செயல் வேடிக்கையாக இருந்தது. அந்தச் செய்தியாளரை தமக்கருகே அமரச் செய்து, "நான் ஓய்வு பெறவேண்டும் என நினைக்கிறீர்களா?" என்று அவரிடம் கேட்டார் டோனி. அதற்கு, "இல்லை, இருந்தாலும் கேட்கிறேன்," என்றார் அந்தச் செய்தியாளர். .

தொடர்ந்து ஆடுவீர்களா என்று தம்மிடம் கேட்ட ஆஸி. செய்தியாளரை மேடைக்கே வரச் செய்து அவர் வாயிலிருந்தே பதிலை வரவழைத்த டோனி. காணொளிப்படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!