‘தாக்கியவர்களுக்கு ஆயுட்காலத் தடை’

பேருந்து தாக்கு-தலில் ஈடு­பட்ட காற்­பந்து ரசி­கர்­களுக்கு ஆயுட் ­கா­லத் தடை விதிக்­கப்­படும் என்று வெஸ்ட் ஹேம் காற்பந்து குழுத் தெரி­வித்­துள்­ளது. வெஸ்ட் ஹேம் குழுவிற்கு எதிரான ஆட்­டத்­தில் விளையாட சென்று கொண்­டி­ருந்த மான்­செஸ்டர் யுனைடெட் குழு­வி­ன­ரது பேருந்­தின் மீது நேற்று தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. இச்­சம்ப­வத்­தின்­போது, பேருந் ­தின் மீது போத்­தல்­கள் வீசப்­பட்­ட ­தோடு அதன் சன்னல் கண்­ணா­டி­களும் நொறுக்­கப்­பட்­டன. இதன் கார­ண­மாக ஆட்டம் 45 நிமி­டங்கள் தாம­த­மாக தொடங்­கி­யது. ஆட்­டத்­தின்­போ­தும் மேன்யூ கோல்­காப்­பா­ளர் டேவிட் ட கியா மீது போத்­தல்­கள் வீசப்­பட்­டன.

“போலியன் மைதா­னத்­திற்கு வெளியே கூடி­யி­ருந்த வெஸ்ட் ஹேம் ரசி­கர்­களின் செயல் முறை­யா­னது அல்ல,” என்று அக்­கு­ழு ­வின் அறிக்கை தெரி­வித்­தது. இது­தொ­டர்­பாக, போலிசின் உதவி­யோடு அடை­யா­ளம் காணப்­பட்டு தாக்குதலில் ஈடுபட்டவர் களுக்கு காற்­பந்தாட்­டத்தைக் காண ஆயுட்­கால தடை­வி­திக்­கப்­படும் என்றும் அந்த அறிக்கை தெரி­விக்­கிறது. ஆனால், வெஸ்ட் ஹேமின் துணைத் தலைவர் டேவிட் சுலவன், பேருந்ததைச் சுற்றி மக் கள் இருந்தார்களே தவிர பேருந் தின் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் வந்த பேருந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது போலிசார் புகையெறி குண்டுகளைப் பயன்படுத்தினர். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இபிஎல் ஆட்டமொன்றில் செல்சி குழுவின் கோலை 67வது நிமிடத்தில் சமன் செய்தார் லெஸ்டர் சிட்டி குழுவின் இன்டிடி (இடமிருந்து 2வது). படம்: ஏஎஃப்பி

20 Aug 2019

செல்சியின் முதல் வெற்றிக்கு தடையான லெஸ்டர்