எஃப்1 பந்தயம்: ஹெமில்டன் வெற்றி

வியேன்னா: ஆஸ்திரிய எஃப்1 கார் பந்தயத்தை மெர்சடிஸ் அணியின் லூவிஸ் ஹெமில்டன் கைப்பற்றியுள்ளார். விறுவிறுப்பாக நடந்து முடிந்த இந்தப் பந்தயத்தின் இறுதிச் சுற்றில் மெர்சடிஸ் அணியைச் சேர்ந்த மற்றொரு வீரரான நிக்கோ ராஸ்பர்க்கின் காரும் ஹெமில்டனின் காரும் மோதிக் கொண்டன.

இந்த மோதலின் காரண மாக ராஸ்பர்க்கின் கார் சேத மடைந்தது. அவர் நான்காவது நிலையில் பந்தயத்தை முடித் தார். விபத்துக்கு ராஸ்பர்க் காரணமாக இருந்ததால் அவருக்கு 10 வினாடி பெனால் டியும் இரண்டு குற்றப்புள்ளி களும் விதிக்கப்பட்டன. இதன் விளைவாக ஒட்டு மொத்த பந்தயப் புள்ளிகள் அடிப்படையில் ராஸ்பர்க் குக்கும் ஹெமில்டனுக்கும் இருக்கும் இடைவெளி 11 புள்ளிகளுக்குக் குறைந்தது. விபத்து குறித்து இரு வீரர்களும் ஒருவரை ஒருவர் குறை கூறினர். விபத்துக்குத் தாம் காரணமல்ல என்றும் ராஸ்பர்க் கின் கார் தமது கார் மீது மோதிய தாகவும் ஹெமில்டன் தமது கார் பொறியாளரிடம் உடனடியாக அலைபேசி மூலம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், விபத்து பற்றி கருத்து தெரிவித்த ராஸ்பர்க் அது தமக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகக் கூறினார். "எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் முறியடிக்கப் போராடிக் கொண்டிருந்தோம். காரின் பிரேக்குகளை அழுத்துவதில் எனக்குச் சிரமம் ஏற்பட்டது. ஆனால் ஹெமில்டன் திடீரென்று எனது காரை நோக்கி அவரது காரைத் திருப்பியதுதான் எனக்கு அதிர்ச்சி யைத் தந்தது. அதுவே விபத்துக்குக் காரணமாக இருந்தது.

என்னால் நம்ப முடியவில்லை," என்றார் ராஸ்பர்க். இதற்கிடையே, விபத்தை முட்டாள் தனமானது என்று மெர்சடிஸ் அணியின் தலைவர் டோட்டோ வூல்ஸ் வர்ணித்தார். ஆனால் விபத்துக்கு யார் காரணம் என்று அவர் கருத்து தெரிவிக்கவில்லை. பந்தயத்தை முதல் நிலையில் இருந்து ஹெமில்டன் ஆரம்பித்தார். இருப்பினும், சில தவறான உத்திகள் அவருக்குச் சில பின்னடைவுகளைத் தந்தது. அவற்றை எல்லாம் ஒருவழி யாக சமாளித்து அவர் பந்தயத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

சவால்களை முறியடித்து வாகை சூடிய லூவிஸ் ஹெமில்டன். படம் ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!