மீண்டும் செல்சிக்கு வந்த டாவிட் லுவிஸ்

கடைசி நேர மாற்­றத்­தின்­போது தான் முன்னர் விளை­யா­டிய செல்சி குழு­வுக்கே வந்து சேர்ந்தார் டாவிட் லுவிஸ். கடந்த பரு­வத்­தில் பிஎஸ்ஜி குழு­விற்­காக விளையாடி வந்த பிரேசில் தற்­காப்பு விளை­யாட்­டா­ளர் டாவிட் லுவிஸ் மூன்று ஆண்டு ஒப்­பந்தத்­தின் அடிப்­படை­யில் செல்சி குழு­விற்குச் சென்று உள்ளார். 29 வயது லுவிசை 34 மில்­லி­யன் பவுண்­டு­களுக்கு வாங்­கி ­யுள்­ளது செல்சி.

கடந்த 2011ஆம் ஆண்டு பென்­ஃ­பிகா குழுவில் இருந்த அவரை 21.3 மில்­லி­யன் பவுண்­டு­களுக்கு வாங்­கி­யது செல்சி. அது­மு­தல் சுமார் 143 ஆட்­டங்களில் செல்சி குழு­விற்­காக விளை­யா­டிய அவர் 2014ஆம் ஆண்டு 40 மில்­லி­யன் பவுண்­டு­களுக்கு பிஎஸ்ஜி குழு­விற்­குச் சென்றார்.

தனது நாட்­டிற்­காக 56 ஆட்­டங்களில் விளை­யா­டிய அவர், சாம்­பி­யன்ஸ் லீக் கிண்ணம் வென்றார். 2012ஆம் ஆண்டு செல்சி குழு­விற்­காக விளை­யா­டிய 2012ல் எஃப்ஏ கிண்­ணத்தை­யும் ஓர் ஆண்­டிற்­குப் பிறகு யூரோப்பா லீக் கிண்­ணத்தை­யும் வென்றார். இதற்­கிடையே, 25 வயது அலோன்சோ மூன்றா­வது முறையாக பிரி­மி­யர் லீக் குழு­விற்கு வந்­துள்­ளார். ஏற்­கெ­னவே போல்டன், ஃபி­யோ­ரென்­டினா குழுக்­களுக்­காக விளை­யா­டிய அவரை இந்த முறை 23 மில்­லி­யன் பவுண்­டு­களுக்கு வாங்­கி­ உள்­ளது செல்சி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!