நியூசி.க்குப் பதிலடி கொடுக்க துடிக்கும் இந்தியா

மொகாலி: நியூசிலாந்துக்கு எதி ரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. இதன் விளைவாக இரு அணி களுக்கு இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என்று சமநிலையில் இருக்கிறது. டெஸ்ட் தொடரில் நியூசி லாந்தை 3=0 என ‘ஒயிட்வாஷ்’ செய்த இந்தியா ஒருநாள் போட்டித் தொடரிலும் அத்தகைய அபார வெற்றியைப் பெறும் இலக்குடன் இருந்தது. இந்தக் கனவு கலைந்தபோதி லும் எஞ்சியிருக்கும் ஒருநாள் ஆட்டங்களில் வெற்றி பெற்று தரவரிசையில் முன்னேற இந்தியா இலக்கு கொண்டிருக்கிறது. வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இந்நிலையில், இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெறு கிறது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்க கடுமையாகப் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுடெல்லியில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பந்தடிப்பு மிகவும் மோசமாக இருந்தது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறவேண்டுமாயின் இதைச் சரிசெய்வது அவசியம். சுரேஷ் ரெய்னா இல்லாதது பந்தடிப்பு வரிசையில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஏழு ஓட்டங்களை மட்டும் விட்டுத் தந்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அனைத்துலக டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆகச் சிறந்த பந்துவீச்சைப் பதிவுசெய்த தீபக் சாஹர். படம்: ஏஎஃப்பி

12 Nov 2019

‘ஹாட்ரிக்’குடன் தீபக் சாஹர் உலக சாதனை

தனக்குப் பதிலாக டிபாலா களமிறக்கப்பட்டபோது இறுக்கமான முகத்துடன் வெளியேறிய  ரொனால்டோ. படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

மாற்று வீரரைக் களமிறக்கியதால் ரொனால்டோ அதிருப்தி

லிவர்பூல் குழுவின் இரண்டாவது கோலை அடிக்கும் முகம்மது சாலா (இடது). படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

முதலிடத்தை வலுப்படுத்திக்கொண்ட லிவர்பூல்