வீழ்ச்சியடைந்த எவர்ட்டன்

எவர்ட்டன்: சொந்த மைதான மான குடிசன் பார்க்கில் எவர்ட்டன் குழுவை நேற்று அதிகாலை எதிர் கொண்ட லிவர்பூல் குழு கூடுதல் நேரத்தில் சாடியோ மானே போட்ட கோல் மூலம் அதை வீழ்த்தியது. இந்தக் காற்பந்து பருவத்தில் 34 மில்லியன் பவுண்டுகளுக்கு செளத்ஹேம்டன் குழுவிலிருந்து லிவர்பூலுக்கு மாறிய சாடியோ மானே, சக வீரர் ஸ்டரிட்ஜ் அடித்த பந்து எவர்ட்டன் கோல் கம்பத்தை தொட்டு வந்ததும் மின்னலெனப் பாய்ந்து பந்தை வலைக்குள் புகுத் தினார்.

இதைத் தொடர்ந்து உள்ளூர் எதிரணியினரான லிவர்பூலுடன் கடந்த 20 ஆட்டங்களில் ஒரு முறை மட்டுமே எவர்ட்டன் அந்தக் குழுவை வீழ்த்தியுள்ளது குறிப்பிட தக்கது. ஆட்டத்தின் இரண்டாம் பாதி யின் ஒரு கட்டத்தில் லிவர்பூலின் ஜோர்டான் ஹெண்டர்சன் மீது எவர்ட்டனின் ரோஸ் பார்க்லி காட்டமாக மோதினார். இந்த சம் பவத்தில் ரோஸ் பார்க்லிக்கு வெறும் மஞ்சள் அட்டை மட்டுமே காண்பித்து எச்சரிக்கை விடுக்கப் பட்டது அவரது அதிர்ஷ்டமே என காற்பந்து விமர்சகர்கள் கூறு கின்றனர். சாடியோ மானே தந்த இந்த வெற்றியால் லிவர்பூல் அணிக்கு மதிப்பிட முடியாத மூன்று புள்ளிகள் கிடைத்ததாக பிபிசி செய்தித்தகவல் கூறுகிறது.

கோல் போட்ட மகிழ்ச்சியில் எவர்ட்டனுக்கு எதிராக லிவர்பூலின் சாடியோ மானே (வலம், சிவப்பு சீருடையில்). படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!