நீதிமன்றத்தை அணுகிய டோனி

புதுடெல்லி: ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் விளம்பரத் தூதராக தனது பெயரைப் பயன் படுத்தியதாகக் கூறி 'மேக்ஸ் மொபிலிங்க் பிரைவேட் லிமிட் டெட்' நிறுவனத்தின் மீது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி டெல்லி உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கிறார். நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி அந்நிறுவனம் செயல்பட்டதாக டோனி தமது புகாரில் குறிப் பிட்டுள்ளார். "உத்தரவுக்கு இணங்கி நடக்காதது ஏன்? 2016 ஏப்ரல் 21ஆம் தேதி நீதிமன்றம் பிறப் பித்த உத்தரவை இரு தரப்பி னரும் மதித்து நடக்கவேண்டும்," என்று அறிவுறுத்திய நீதிபதி மன்மோகன், வழக்கு விசாரணையை ஜூலை 28ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

'மேக்ஸ் மொபிலிங்க்' நிறுவனத்தின் தயாரிப்புகளில் டோனியின் பெயர் இடம்பெறக்கூடாது என 2014 நவம்பர் 17ஆம் தேதியே நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அந்த உத்தரவை அந்நிறுவனம் மீறியதாக டோனி குற்றம் சாட்டி இருக்கிறார். அத்துடன், தனது பெயர், படம் அச்சிடப்பட்ட கைபேசிகள் உள்ளிட்ட அந்நிறுவனத்தின் எல்லாத் தயாரிப்புகளையும் பறி முதல் செய்யவேண்டும் என்றும் டோனி கோரியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!