ஸ்லாட்டான் இப்ராகிமோவிச், மிங்ஸ் மீது வன்முறை குற்றச்சாட்டு

லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட்டின் ஸ்லாட்டான் இப்ராகிமோவிச், போர்ன்மத்தின் டைரோன் மிங்ஸ் ஆகியோர் மீது வன்முறை குற்றச்சாட்டை இங்கிலிஷ் காற்பந்துச் சங்கம் பதிவு செய்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று யுனைடெட்டுக்கும் போர்ன்மத்துக்கும் இடையிலான ஆட்டம் 1=1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. அந்த ஆட்டத்தின்போது மிங்சுடைய காலணியின் அடிப்பகுதி இப்ராகிமோவிச்சின் தலையில் அழுத்தமாகப் பட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சிறிது நிமிடங்கள் கழித்து, மிங்ஸின் முகத்தில் இப்ராகிமோவிச் தமது முழங்கையால் ஓங்கி அடித்தார். இந்த இரண்டு தப்பாட்டங்களையும் நடுவர் கவனிக்காமல் விட்டது குறிப்பிடத்தக்கது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் தடை விதிக்கப்படலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!