ஆஸ்திரேலிய பொது விருது போட்டிகள் புகையால் பாதிப்பு

மெல்பர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய பொது விருதுப் போட்டிகள் இம்மாதம் 20ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை நடக்கவிருக்கின்றன.

முதற்கட்டமாக, தகுதிச் சுற்றுப் போட்டிகள் இப்போது நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் எரிந்து வரும் கட்டுக்கடங்காத காட்டுத் தீயால் எழுந்த புகையால் விளையாட்டாளர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

தகுதிச் சுற்றின் முதல் சுற்று ஆட்டத்தில் பங்கேற்ற ஸ்லோவேனிய வீராங்கனை டலிலா யாக்குபோவிச், காற்றின் தரம் மோசமாக இருந்ததால் கடுமையாக இருமினார். இதையடுத்து, இடையிலேயே அவர் ஆட்டத்தைக் கைவிட்டு, இன்னொருவர் துணையுடன் திடலைவிட்டு வெளியேற நேர்ந்தது.

“என்னால் நடக்கவே முடியாததால் எங்கே நிலைகுலைந்து விழுந்து விடுவேனோ என அஞ்சினேன்,” என்றார் டலிலா.

இதேபோல, கனடிய வீராங்கனை யூஜெனி பூஷார்டும் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, போட்டியின் இடையே திடலைவிட்டு வெளியேறி, சற்று நேரம் ஓய்வெடுத்தபின் மீண்டும் திரும்பினார்.

மெல்பர்ன் நகரவாசிகள் நேற்று வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், புகைமூட்டம் மோசமாக இருந்தால் ஆஸ்திரேலிய பொது விருது போட்டிகளைத் தள்ளிவைக்கத் தயங்கமாட்டோம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!